தக்காளி முட்டை சாதம் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

- Advertisement -

தக்காளி சாதமும் முட்டை சாதமும் தனித்தனியா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ரெண்டும் சேர்த்து தக்காளி முட்டை சாதம் செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு எப்பவும் ஒரே மாதிரியா தக்காளி சாதம் லெமன் சாதம் புளி சாதம், தயிர் சாதம் அப்படின்னு ஒரே மாதிரியான கலவை சாதங்களை டிபன் பாக்ஸுக்கு கொடுத்து விடுவதற்கு பதிலாக இந்த மாதிரி ஒரு டிஃபரண்டான தக்காளி முட்டை சாதம் செஞ்சு கொடுத்து விடுங்க.

-விளம்பரம்-

இதுக்கு சைடு டிஷ் கூட தேவை இல்லை. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் அப்படியே சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மட்டுமில்லாம வேலைக்கு போறவங்களும் கூட நீங்க இந்த சாதத்தை செய்து கொண்டு போகலாம். செம்ம டேஸ்டா இருக்கும். ஒரே மாதிரியா குழம்பு சாதம் பொரியல் கூட்டு அப்படின்னு செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி சிம்பிளா தக்காளி முட்டை சாதம் செஞ்சிருங்க சைட் டிஷ் செய்யக்கூட தேவையே கிடையாது முட்டை இருக்கிறதால அப்படியே வச்சு சாப்பிட்டுக்கலாம்.

- Advertisement -

இந்த சுவையான டேஸ்டான தக்காளி முட்டை சாதம் ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த சுவையான தக்காளி முட்டை சாதத்துக்கு வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு கூட நீங்க இதை லஞ்சுக்கு செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான தக்காளி முட்டை சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

தக்காளி முட்டை சாதம் | Tomato Egg Rice Recipe In Tamil

தக்காளி சாதமும் முட்டை சாதமும் தனித்தனியா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ரெண்டும் சேர்த்து தக்காளி முட்டை சாதம் செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு எப்பவும் ஒரே மாதிரியா தக்காளி சாதம் லெமன் சாதம் புளி சாதம், தயிர் சாதம் அப்படின்னு ஒரே மாதிரியான கலவை சாதங்களை டிபன் பாக்ஸுக்கு கொடுத்து விடுவதற்கு பதிலாக இந்த மாதிரி ஒரு டிஃபரண்டான தக்காளி முட்டை சாதம் செஞ்சு கொடுத்து விடுங்க இதுக்கு சைடு டிஷ் கூட தேவை இல்லை. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் அப்படியே சாப்பிடலாம் குழந்தைகளுக்கு மட்டுமில்லாம வேலைக்கு போறவங்களும் கூட நீங்க இந்த சாதத்தை செய்து கொண்டு போகலாம். செம்ம டேஸ்டா இருக்கும். இந்த சுவையான டேஸ்டான தக்காளி முட்டை சாதம் ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Tomato Egg Rice
Yield: 4 People
Calories: 189kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 7 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 கப் உதிரியாக வடித்த சாதம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 முட்டை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • இடித்த பூண்டு நறுக்கிய பெரிய வெங்காயம் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • தக்காளியை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வந்த பிறகு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக வேக வைத்து சாதம் போட்டு கிளறவும்.
  • பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான தக்காளி முட்டை சாதம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 189kcal | Carbohydrates: 3.8g | Protein: 16g | Fat: 3.5g | Sodium: 83mg | Potassium: 127mg | Vitamin A: 93IU | Vitamin C: 112mg | Calcium: 23mg | Iron: 16mg

இதனையும் படியுங்கள் : முட்டை மசாலா டோஸ்ட் இந்த மாதிரி செய்ங்க நிமிசத்துல காலியாயிடும்!