Advertisement
சைவம்

இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிட ருசியான தக்காளி பன்னீர் கிரேவி இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் இந்த தக்காளி பன்னீர் கிரேவியும் ஒன்று. இந்த தக்காளி பன்னீர் கிரேவியானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான தக்காளி கிரேவி செய்ய நினைத்தால் தக்காளி பன்னீர் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.

ஒரு முறை இந்த சுவையான தக்காளி பன்னீர் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம். இந்த தக்காளி பன்னீர் கிரேவியை செய்வதற்கு காய்கறிகள் கூட எதுவும் தேவை இல்லை கொஞ்சம் வெங்காயம், ஒரு கப் தக்காளி, பன்னீர் இருந்தால் போதும் இந்த கிரேவியை 10 நிமிடத்திற்குள்ளே தயார் செய்து விடலாம். இந்த தக்காளி கிரேவியுடன் சோறு உண்டு கை கழுவிய பிறகு வீசும் கை மணம் இன்னொரு முறை சோறு உண்ண தோணும். மேலும், இந்தக் கிரேவியை அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். இந்த கிரேவி நல்ல ஒரு அசைவ குழம்பு சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். மண் வாசனையுடன் கூடிய தக்காளி பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

தக்காளி பன்னீர் கிரேவி | Tomato Paneer Gravy Recipe In Tamil

Print Recipe
வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் இந்த தக்காளி பன்னீர் கிரேவியும் ஒன்று. இந்த தக்காளி பன்னீர் கிரேவியானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான தக்காளி கிரேவி
Advertisement
செய்ய நினைத்தால் தக்காளி பன்னீர் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.
Course dinner, LUNCH
Cuisine Indian
Keyword Tomato Paneer Gravy
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 61

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 1/4 கி தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் அரிசி மாவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 4 வர ‌மிளகாய்
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் தக்காளியை தண்ணீரில் அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு‌ கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் ஒரு பவுளில் அரிசி மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்து தக்காளியில் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கிரேவி கொதித்ததும் பன்னீரை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க விடவும். கிரேவி கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான‌ மற்றும் சுலபமான தக்காளி பன்னீர் கிரேவி தயார். இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் சுவையாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 61kcal | Carbohydrates: 3.5g | Protein: 8g | Fat: 2g | Sodium: 16mg | Potassium: 237mg | Fiber: 4.1g | Vitamin A: 20IU | Vitamin C: 26mg | Calcium: 12.7mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : ரோட்டு கடை ஸ்டைல் தக்காளி சட்னி ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க இரண்டு இட்லி சேர்த்தே சாப்பிடுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

6 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

16 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

22 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago