Advertisement
சைவம்

காலை டிபனுக்கு சூப்பரான தினை புட்டு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

Advertisement

பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. அத்தகைய தானியங்களில் ஒன்று தான் தினை. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். இதில் இன்று நாம் பார்க்க இருப்பது தினை புட்டு. பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என புட்டு வகைகள் ஏராளம். பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது.

நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூழ் வகைகள், புட்டு வகைகள் என உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகளை மட்டும் தான் உணவாக எடுத்து கொண்டனர். காலை வேளையில் நமது வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், நீங்கள் புட்டுவை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

Advertisement

தினை புட்டு | Thinai Puttu Recipe In Tamil

Print Recipe
பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. அத்தகைய தானியங்களில் ஒன்று தான் தினை. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். இதில் இன்று நாம் பார்க்க இருப்பது தினை புட்டு. பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு
Advertisement
கொடுக்கலாம். ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என புட்டு வகைகள் ஏராளம். காலை வேளையில் நமது வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், நீங்கள் புட்டுவை தேர்வு செய்து கொள்ளலாம்.
Course Breakfast
Cuisine Indian
Keyword Thinai Puttu
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 351
Advertisement

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 புட்டு பாத்திரம்

Ingredients

  • 1 கப் தினை
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 டீஸ்பூன் உப்பு

Instructions

  • முதலில் தினை அரிசியை நன்கு அலசி ஒரு துணியில் பரப்பி காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு மாவு போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரிசி மாவை தேவையான அளவு ஒரு பவுளில் எடுத்து அதனுடன் உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு கலந்து புட்டு பதத்திற்க்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு புட்டு அவிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நிரப்பி நன்றாக கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்த உடன் புட்டுக் குழாயில் புட்டு மாவை வைத்து பிறகு தேங்காய் உள்ளே போட்டு மீண்டும் புட்டு மாவை உள்ளே வைக்கவும். மேல் துருவிய தேங்காய் போடவும்.
  • பின் புட்டுக் குழாயில் ஆவி வந்ததும் புட்டுக் குழாய் பின் வழியில் இருந்து குத்தி மெதுவாக புட்டை வெளிய எடுக்கவும்.‌ அவ்வளவுதான் சுவையான தினை புட்டு தயார்.
  • இந்த தினை புட்டுடன் தேங்காய் துருவல் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 351kcal | Carbohydrates: 6.2g | Protein: 12.3g | Fat: 4.3g | Sodium: 22mg | Potassium: 230mg | Fiber: 6.7g | Sugar: 3g | Vitamin A: 12IU | Vitamin C: 7.84mg | Calcium: 31mg | Iron: 8.2mg

இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த தினை இனிப்பு பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement
Prem Kumar

Recent Posts

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

22 நிமிடங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

3 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

3 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

5 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

7 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

8 மணி நேரங்கள் ago