Advertisement
சைவம்

சுட சுட சாதத்துடன் சாப்பிட வீடே மணக்மணக்க ருசியான தக்காளி மிளகு ரசம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement

பொதுவாக நாம் என்ன சாப்பாடு சாப்பிட்டாலும் அது சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி சாப்பிட்டு முடித்தவுடன் ரசம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றும் காரணம் நாம் வயிறு முழுவதும் அஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் ரசம் அந்த உணவுகளை ஜீரணம் ஆகிவிடும்.

ஆனால் என்னதான் பல உணவுகளை நன்றாக சமைத்தாலும் ரசம் ஒரு சிலருக்கு சுவையாக வராது எனவே சுவையாக அருமையாக ஒரு தக்காளி மிளகு ரசம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் இதில் மிளகு சேர்த்து உள்ளதால் இப்போதுள்ள மழைக்காலத்திற்கு ஏதுவாக சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற ஒரு ரசமாக இருக்கும்.

Advertisement

இதில் உள்ள சீரகம் நம் செரிமான மண்டலத்தை சீராக்கும் அஜீரணம் ஆகாத உணவுகளையும் ஜீரணம் ஆகிவிடும் மேலும் நாம் இதில் சேர்க்கும் கொத்தமல்லி இலைகள் நம் உடம்பில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கும் இவ்வளவு நன்மைகளும் இருக்கும் தக்காளி மிளகு ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க

தக்காளி மிளகு ரசம் | Tomato Pepper Rasam Recipe In Tamil

Print Recipe
என்னதான்பல உணவுகளை நன்றாக சமைத்தாலும் ரசம் ஒரு சிலருக்கு சுவையாக வராது எனவே சுவையாக அருமையாக ஒரு தக்காளி மிளகு ரசம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் இதில் மிளகு சேர்த்து உள்ளதால் இப்போதுள்ள மழைக்காலத்திற்கு ஏதுவாக சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற ஒரு ரசமாக இருக்கும். இதில் உள்ள சீரகம் நம்
Advertisement
செரிமான மண்டலத்தை சீராக்கும் அஜீரணம் ஆகாத உணவுகளையும் ஜீரணம் ஆகிவிடும் மேலும் நாம் இதில் சேர்க்கும் கொத்தமல்லி இலைகள் நம் உடம்பில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கும் இவ்வளவு நன்மைகளும் இருக்கும் தக்காளி மிளகு ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க
Course Rasam
Cuisine tamil nadu
Keyword Tomato Pepper Rasam
Prep Time 5 minutes
Cook Time
Advertisement
10 minutes
Servings 4
Calories 128

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 5 பற்கள் பூண்டு
  • புளி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • 2 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • கொத்தமல்லி இலைகள் தேவையான அளவு
  • 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 3/4 ஸ்பூன் சீரகத்தூள்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • கறிவேப்பிலை தேவையான அளவு

Instructions

  • முதலில் புளியை ஒரு 15 நிமிடங்கள் ஊற வைத்து கரைத்துஎடுத்து வைத்துக் கொள்ளவும். அந்த புளி கரைசலில் எடுத்து வைத்துள்ள தக்காளியை நசுக்கி கரைத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு சீரகம் வெந்தயம் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பத்துப்பற்கள் பூண்டை இடித்து சேர்த்துக் கொண்டு சிறிதளவு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • கரைத்து வைத்துள்ள புளி தக்காளி கரைசலை கடாயில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • அந்த புளிக்கரைசல் நன்றாக கொதித்தவுடன் அதில் எடுத்து வைத்துள்ள மிளகுத்தூள் சீரகத்தூள் மறுபடியும் சிறிதளவு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை மல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான தக்காளி மிளகு ரசம் தயார்

Notes

மழைக்காலத்திற்கு ஏற்ற ஒரு அருமையான தக்காளி ரசத்தை ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து பாருங்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 49g | Protein: 2g | Sodium: 6.9mg | Potassium: 1.7mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

3 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

3 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

3 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

4 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

6 மணி நேரங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

7 மணி நேரங்கள் ago