- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Side Dish
கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன. குறிப்பாக இதில் இருக்கக்கூடிய ஒமேகா 3, கால்சியம், விட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் போன்றவை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அதிகம் தேவைப்படக்கூடிய சத்துக்களாக இருக்கிறது. வாரம் ஒரு முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது. கீரைப் பூண்டு மசியல் ரொம்ப சுலபமாக பசுமை நிறம் மாறாமல் செய்யலாம்.
வெறும் கீரையை வைத்து மட்டும் இந்த மசியல் செய்யப் போகின்றோம். இதனுடன் பூண்டு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்க போவது கிடையாது. குக்கரில் 2 விசில் விட்டு மைய கீரைப் பூண்டு மசியல் விட்டால் போதும். சுவையான சத்து நிறைந்த பச்சை கீரை பூண்டு மசியல் தயார். ஆரம்பத்தில் சமைக்க பழகுபவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த ரெசிபியை நிச்சயம் எல்லோரையும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாக்கணும்.
Ingredients
Method
கீரையின் வேரை மட்டும் நீக்கி விட்டு, நன்றாகத் தண்ணீரில் அலசி எடுத்து, பொடியாக நறுக்கவும். நறுக்கியக் கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன், பூண்டைப் பொடியாக நறுக்கி, பின் தட்டிப் போடவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போடவும்.
உப்பையும் சேர்த்து, மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. கீரையின் நீர்ச்சத்திலேயே வெந்து விடும்.
நீண்ட நேரம் வேக விடக்கூடாது. நிறம் மாறிவிடும். 2 அல்லது 3 நிமிடங்கள் வெந்தால் போதும். கீழே இறக்கி வைத்து, கீரை கடையும் மத்தால் நன்றாகக் கடையவும்.
மத்து இல்லாவிட்டால், வெந்தக் கீரையை சற்று ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். காரமானக் குழம்பு செய்யும் பொழுது, தொட்டுக் கொள்ள இதைச் செய்யலாம்.
சுடு சாதத்தில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விட்டு கீரை மசியலைச் சேர்த்து பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.





