Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Kovaikkai Sadam
கோவைக்காய் சாதம் தென்னிந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் கோவைக்காய் சாதம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. நாம் இன்று இங்கு காண இருப்பது கோவைக்காய் சாதம். கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்ப Photo: Recipes
முகப்பு/Uncategorized2023.09.26பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கோவைக்காய் வைச்சி இப்படி கூட சாதம் செய்யலாமா ? அடுத்தமுறை கோவைக்காய் வாங்கினால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

கோவைக்காய் சாதம் தென்னிந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் கோவைக்காய் சாதம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. நாம் இன்று இங்கு காண இருப்பது கோவைக்காய் சாதம். கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்ப

PK
எழுதியவர்Prem Kumar26 செப்டம்பர், 2023 அன்று 11:02 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
LUNCH

கோவைக்காய் சாதம் தென்னிந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் கோவைக்காய் சாதம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. நாம் இன்று இங்கு காண இருப்பது கோவைக்காய் சாதம். கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது.

குறிப்பாக இதில் உடம்பிற்கு மிகவும் அவசியமான இரும்பு சத்து, புரத சத்து, மற்றும் கால்சியம் அதிகம் இருக்கிறது. இதில் நாம் வேர்க்கடலையை சேர்த்து செய்வதால் உடம்பிற்கு புரத சத்து நன்கு கிடைக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் என்ன மாதிரியான உணவுகளை செய்ய வேண்டும் என்ற யோசனை இல்லத்தரசிகளுக்கு அதிகம் இருக்கும். இந்த பதிவு பெண்களுக்கு மட்டுமல்ல, வெளியூருக்கு சென்று வேலை பார்க்கும் ஆண்களுக்கும் உதவியாக இருக்கும்.

இதை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் எளிமையானவை தான். இதில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இதை நாம் வாரத்திற்கு ஒரு முறை என்று நம் உணவு பழக்கத்தில் சேர்த்து கொள்ளலாம். நம் குழந்தைகளுக்கும் கோவைக்காய் சாதம் மிகவும் பிடிக்கும் மேலும் அவர்களின் உடம்பிற்க்கும் இவை தெம்பூட்டும்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் கோவைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் சிறிது நெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும். பின் வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் அதில் நறுக்கிய கோவைக்காய் சேர்த்து 5 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேக விடவும்.

  4. 4

    பின் திறந்து காய் சற்று நிறம் மாறியதும் உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன்பின் மீண்டும் 10 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேக விடவும்.

  5. 5

    கோவைக்காய் சற்று வதங்கியதும் தக்காளி மற்றும் மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பின்னர் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கிளறவும். பின் எல்லாம் கொதித்து தொக்கு மாதிரி வரும் அப்பொழுது உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும்.

  7. 7

    பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறவும்.அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கோவைக்காய் சாதம் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 212 கலோரி
  • கொழுப்பு · 9g
  • புரதம் · 7g
  • கார்போஹைட்ரேட் · 65g
தலைப்புகள்
#கீரை சாதம்#கல்யாண பிரிஞ்சி சாதம்#அரைத்த மாங்காய் சாதம்#உருளைக்கிழங்குசாதம்#கோவைக்காய் சாதம்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement