- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை தரக்கூடிய ‘மிளகு சாதம்’ எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக குழந்தை பெற்ற தாய்மார்கள், வயிற்று எரிச்சல், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மிளகாய்ந்த்தூள், பச்சை மிளகாய் தவிர்த்து இந்த சாதத்தை அடிக்கடி செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு இந்த சாதத்தை செய்து தரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம் சளித் தொந்தரவும் இருக்காது. சரி சட்டென்று அந்த ஆரோக்கியமான ரெசிபியை சுலபமாக எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க. இனி நீங்க பெப்பர் ரைஸ் சாப்பிடணும்னா ஹோட்டல் போய் வெயிட் பண்ற நேரத்தை விட சீக்கிரமாக, வீட்டில் அதுவும் நல்ல டேஸ்ட்டாவே செஞ்சுடலாம்.
ஹோட்டல்களில் கிடைக்கும் எல்லா உணவுகளையும் நாம் வீட்டில் சமைத்தாலும் கூட, இந்த பிரைட் ரைஸ் நான் அதிகமாக வீட்டில் செய்ய முயற்சிப்பதில்லை ஏனென்றால் அதில் சேர்க்கப்படும் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியமும் கிடையாது. ஆனால் வித்தியாசமாக இந்த இலகு சாதத்தை செய்து பாருங்களேன் . நீங்கள் நாம் சாதாரணமாக சமைக்கும் முறையிலேயே இந்த பெப்பர் ரைஸ் செய்துவிடலாம். அது எப்படி என்று தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
Ingredients
Method
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
அதன்பிறகு கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் .கடலைப்பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் மிளகுத் தூளை சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.
மிளகு வாசனை வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இந்தகலவையை சாதத்துடன் சேர்க்கவும்.பெப்பர் கலவை சாதத்துடன் நன்கு ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.
இறுதியில் கொத்தமல்லி தழையை மேலே தூவவும்.சூடான, சுவையான பெப்பர் ரைஸ் தயார்.





