- Prep
- 10 min
- Cook
- 5 min
- Cuisine
- tamilnadu
- Course
- Breakfast
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஹோட்டலில் சென்றால் உடணனே ஆர்டர் செய்து சாப்பிடுவது இந்த மொறு மொறு ரவா தோசை தாங்க. அந்த காலத்திலிருந்தே இது தொடர்ந்து நடப்பது தான். அதே ரவா தோளை வீட்டிலேயே சுலமா செய்யமுடியும்னு சொன்ன நம்புவீர்களா!!! காலை வேளையில் இது விரைவாக தயாராகும் ஒரு உணவு வகை என்று சொல்லலாம்.. ஆம், 15 நிமிடங்களில் நீங்கள் ரவா தோசையினை தயார் சேர்த்து சாப்பிட முடியும். இந்த பதிவில் ஈசி ரவா தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
Ingredients
Method
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் துருவி கொள்ளவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சிறிய சிறிய துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, ரவா, சீரகம், பொடித்த முந்திரி பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.
இந்த மாவுக் கலவையை அரை மணிநேரம் ஊற வைக்கவும் தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கல்லின் ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை ஊற்ற வேண்டும்.
தோசையைச் சுற்றி எண்ணெய் விட்டு, முறுகலாக வெந்ததும் எடுக்கவும். இதனைத் திருப்பிப் போடத் தேவையில்லை. . இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சிறந்த சைட் டிஷ்





