- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 6
- Cuisine
- tamilnadu
- Course
- Gravy, Kulambu
எல்லாருக்கும் விதவிதமான குழம்புகள் தெரிந்திருக்கும் அப்படி ஒரு விதமான குழம்பு தான் இந்த குழம்பு உருண்டை குழம்பு. அதாவது கடலை பருப்பு, துவரம் பருப்பும் சேர்த்து செய்யக்கூடிய ஒரு சூப்பரான உருண்டை குழம்பு. இந்த குழம்பு அதிக அளவு புரதம் நிறைந்ததா இருக்கும். ரொம்பவே சுவையா இருக்கும் இந்த உருண்டைகளை அப்படியே சாப்பிடலாம் குழம்பில் போட்டு சாப்பிடலாம் எப்படி சாப்பிட்டாலும் இந்த உருண்டைகள் ரொம்பவே சுவையா இருக்கும்.
அப்படி இந்த சுவையான உருண்டை குழம்பு எப்படி செய்வது இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இந்த ருசியான உருண்டை குழம்பு ரொம்ப ஹெல்தியானதும் கூட இதுல நீங்க போடுற உருண்டைகளை எல்லாம் அப்படியே சும்மா சட்டி சட்டுன்னு காலி ஆயிடும் அந்த அளவுக்கு ருசியா இருக்கும் இந்த உருண்டை குழம்பு. இந்த உருண்டை குழம்பு பிடிக்காதவங்க அப்படி யாரும் இருக்க மாட்டாங்க உருண்டை குழம்பு எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த உருண்டை குழம்பு ஒரு ஒரு மாதிரியான ஸ்டைலில் எல்லாம் வைப்பாங்க.
நம்ம இப்ப கார குழம்பு மாதிரி வைப்பது எப்படி அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த உருண்டைகளை பருப்பு மட்டும் இல்லாம முருங்கைகீரையும் சேர்த்து செய்யப்போறதுனால அதிக அளவு இரும்பு சத்தும் சேர்ந்து கிடைக்கும். இந்த சுவையான உருண்டை குழம்பு எப்படி ரொம்பவே சுலபமா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம் வாங்க எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Ingredients
Method
முதலில் கடலை பருப்பு, துவரம் பருப்பு இவைகளை ஒரு இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஊற வைத்து எடுத்துள்ள கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
முழுவதுமாக மசிந்து விடக்கூடாது அரைத்து எடுத்து வைத்துள்ள கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், முருங்கை கீரை, உப்பு, சோம்பு கால் கப் அளவிற்கு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து இட்லி பானையில் ஆவியில் வேகவைத்து எடுத்து வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.பிறகு புளி கரைசலில் குழம்பு மிளகாய் தூள், உப்புகலந்து அந்த தாளிப்பில் சேர்த்துக் கொள்னள வேண்டும்.
இவற்றை நன்றாக கலந்து இந்த குழம்பு கொதித்து வந்தவுடன் இட்லி பானையில் வேக வைத்துள்ள உருண்டைகள் வெந்துவிட்டதா என்று சரி பார்த்து வெந்திருந்தால் அவற்றை குழம்பில் சேர்த்து நன்றாக ஒரு பத்து நிமிடம் கொதி வரவும் குழம்பு நன்றாக கொதித்து வந்த பிறகு சூடாக சாதத்தோடு பரிமாறினால் சுவையான உருண்டை குழம்பு தயார்.






