- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியானால் அந்த வாழைப்பூவைக் கொண்டு ஒரு உருண்டை தயாரித்து, குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த வாழைப்பூ உருண்டை குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.பெண்களுக்கு வாழைப்பூ பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம்.
இதனையும் படியுங்கள் : டீக்கடை வாழைப்பூ வடை இப்படி செய்து பாருங்க! அதன் சுவையின் ரகசியம் இது தான்!
கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, அதிக உதிரப்போக்கு உண்டாகும். அப்போது அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், ரத்தப்போக்கு கட்டுப்படும். இன்னும் பல நன்மைகள் உள்ளன.
Ingredients
Method
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள், வேர்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
பின் வாழைப்பூவை சுத்தம் செய்து நரம்பு நீக்கி உப்பு, லெமன் சாறு மோர் கலந்த தண்ணீரில் போடவும்.
பின் அதை நறுக்கி மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
பின் பட்டாணியை கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
பின் உப்பு சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
உருண்டைகளை போடும் போது முதலில் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து பின் பாதி வெந்ததும் அடுப்பு தீயை அதிகரித்து வேகவிடவும் நம்முடைய கோலா உருண்டை ரெடி.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சுத்தம் செய்த வெங்காயம் பட்டை சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள், குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பின் வாணலியில் தாளிக்க எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மராத்தி மொக்கு, அன்னாச்சி பூ, ஜாதிபத்ரி சேர்த்து வதக்கவும்.
கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்றாக பச்சை வாசனை போக கொதித்ததும் ரெடியாக உள்ள கிரேவியில் வாழைப்பூ கோலா உருண்டையை ஒவ்வொன்றாக மெதுவாக போட்டு ஐந்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும்.
பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான ஆரோக்கியமான வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு ரெடி.






