மே மாதம் என்றாலே வெயிலின் தாக்கம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மிகவும் உக்கிரமாக இருக்கக்கூடிய சூரிய பகவான் 25 நாட்கள் மிகவும் தீவிரமான நிலையில் இருப்பார் அதைத்தான் அக்னி நட்சத்திரம் என்று கூறுவார்கள். இந்த அக்னி நட்சத்திரத்தில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட அக்னி நட்சத்திர தோஷம் நீங்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
அக்னி நட்சத்திரம்
ஒவ்வொரு ராசிகளும் சூரிய பகவான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்து அவர்களுடைய பலன்கள் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு சில ராசிக்காரர்களுக்கு தோஷங்கள் ஏற்படும். அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் பொழுது கோவில்களில் இருக்கக்கூடிய தெய்வத்திற்கு விசேஷமான அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அக்னி நட்சத்திரத்தில் ஏற்படக்கூடிய தோஷங்களை நிவர்த்தி செய்ய ஒரு சில பொருட்கள் உள்ளது அந்த பொருட்களுள் நம்முடைய வீட்டில் ஒரு சில பொருட்களை வைத்திருப்பதால் தோஷங்கள் நீங்கும்.
அக்னி நட்சத்திரம் தோஷம் நீங்க செய்ய வேண்டியவை
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய நாட்களில் வீட்டு நிலை வாசலில் வெயிலினால் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகள் வராமல் இருப்பதற்கு வேப்பிலையை வைப்பார்கள். இது ஒரு வகையான மருத்துவ குணம் மிக்க செயலாக பார்க்கப்பட்டாலும் இதுவும் ஒரு பரிகாரமாகவே உள்ளது. இதனோடு சேர்த்து உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய சில விஷயங்களையும் நாம் செய்வதன் மூலம் அக்னி நட்சத்திரத்தால் உடலில் ஏற்படக்கூடிய நோய்களின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ளலாம்.
அக்னி நட்சத்திரமும் வெட்டிவேரும்
அக்னி நட்சத்திரத்தில் மிகவும் முக்கியமாக நம் கையில் வைத்திருக்க வேண்டிய ஒரு பொருள் என்றால் அது வெட்டிவேர். வெட்டிவேர் குளிர்ச்சி தன்மை உடையது எனவே அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் பொழுது வெட்டிவேரை நம்முடைய வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். அன்னி நட்சத்திரம் முடிந்ததும் வெட்டிவேரை ஓடுகின்ற தண்ணீரில் போட வேண்டும். இதிலிருந்து வரக்கூடிய வாசனை தெய்வீக சக்தியை அதிகரிக்கும் தெய்வத்திற்கு குளிர்ச்சியையும் தெய்வீக சக்தியை அதிகரித்தும் கொடுக்கும். இதனை நாம் முறையாக பயன்படுத்தும் போது நம் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும். வெட்டிவேர் சேர்த்த தண்ணீரில் நாம் குளிக்கும் போது உடல் குளிர்ச்சி அடைந்து வெப்பத்தால் ஏற்படக்கூடிய நோய்களின் தாக்கம் குறையும். அதீத குளிர்ச்சியை தரக்கூடிய இந்த ஒரு பொருளை நம் வீட்டில் வைப்பது மூலம் அக்னி நட்சத்திரத்தால் நமக்கு எந்தவித தோஷமும் ஏற்படாது.
இதனையும் படியுங்கள் : சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?


