- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish

தேங்காய் துவையல் வேர்க்கடலை துவையல் பருப்பு துவையல் அப்படின்னு நிறைய துவையல் ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை வரக்கொத்தமல்லி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்பவே டேஸ்டா சூப்பரா இருக்கும். இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க இட்லி, தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், லெமன் சாதம் எல்லாத்துக்கும் இந்த துவையல் சூப்பராகவே இருக்கும். வீட்ல வெங்காயம் தக்காளி எதுவுமே இல்லனா இந்த சூப்பரான துவையல் செஞ்சு சாப்பிடுங்க. இதுல சாதம் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
மேல கொஞ்சமா எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு செஞ்சு சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செய்யலாம். இந்த வரக்கொத்தமல்லி துவையல் சாப்பிடுவதால் மயக்கம் வாந்தி போன்ற பிரச்சனைகள் எல்லாமே சரியாகும். வரக்கொத்தமல்லியில் துவையல் செஞ்சா எப்படி இருக்கும்னு யோசிக்காதீங்க இதை நாம நல்லா வறுத்து செய்ய போறதால பச்சை வாசனை எதுவுமே தெரியாது. இப்ப வாங்க இந்த சுவையான வர கொத்தமல்லி துவையல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கத்திரிக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை வர மல்லி சேர்த்து நன்றாக பச்சை வாசனை போக வறுத்துக்கொள்ளவும்.
10 பல் பூண்டு, புளி, தேங்காய் துருவல் பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்தால் சுவையான வரக்கொத்தமல்லி துவையல் தயார்.






