உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளை நீங்கள் விழ்த்தி வெல்ல வேண்டுமா ? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

இன்றைய காலங்களில் நாம் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ நினைத்தாலும் நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் நம்மை அவ்வாறு வாழ விடுவதில்லை அதற்கு காரணமும் நாமாகத்தான் இருப்போம் ஏனென்றால் ஒரு சில இடங்களில் நம் உண்மையாகவும் நேர்மையாகவும் அடுத்தவர்களுக்காக வளைந்து கொடுக்காமல் இருக்கும் பொழுது அந்த இடங்களில் எல்லாம் நாம் ஒரு சிலரை எதிர்க்க வேண்டியுள்ளது. அவர்களை நம்மை எதிரியாகவும் கருதிக் கொள்கின்றனர் அதே போல் எப்போது நேரம் கிடைக்கும் நம்மை எப்போது வீழ்த்தலாம் என்றும் அவர்கள் காத்துக் கொண்டே இருப்பார்கள்.

-விளம்பரம்-

கண்ணுக்கு தெரியாத எதிரிகள்

பலர் நம் வாழ்வில் நமக்கு எதிரிகள் இல்லை என்றால் அந்த வாழ்க்கை நன்றாகவே இருக்காது என்று சினிமா பானியில் வசனங்கள் பேசினாலும். அவர்கள் நமக்கு தரும் தொல்லைகள் நம்மை நிம்மதியாக வாழ விடாதே அப்படி பல தொல்லைகளை தந்து கொண்டுதான் இருப்பார்கள். நாம் ஒரு விஷயம் செய்ய நினைக்கும் போது அதற்கு இடையூறாக பல தடைகளை உண்டாக்குவார்கள் அதேபோல் நமக்குத் தெரிந்த எதிரிகளாக இருந்தால் நம்மாள் சமாளித்து விட முடியும். ஆனால் நமக்கே தெரியாமல் நமக்கு எதிரிகளாகவும் சிலர் இருப்பார்கள் அவர்களிடம் இருந்து நமக்கு வரும் துன்பங்கள், கஷ்டங்களை எப்படி தடுக்க முடியும்.

- Advertisement -

ஆன்மீக பரிகாரம்

இப்படி கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் எதிரிகள் கண்டிப்பாக வெளியில் இருக்க மாட்டார்கள் நம்முடனே நட்புறவுடன் பழகிக் கொண்டிருப்பவர்கள் ஆக தான் இருப்பார்கள். எனவே முதலில் நம்முடன் இருக்கும் எதிரிகளை ஒழிக்க வேண்டும் ஏனென்றால் நாம் ஒரு விஷயம் செய்யும் போது அது அவர்களுக்கும் தெரிந்து கொண்டு அந்த விஷயத்திற்கு தடைகளை கொண்டு வருவார்கள். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நாம் யாரிடமாவது பணம் கடனாக வாங்க போனால் நாம் அப்படி பணமா கடன் வாங்க கூடாது என்பதற்காகவே அவர்களிடம் நம்மை பற்றி தவறாக கூறி விடுவார்கள். அதனால் கண்ணுக்கு தெரிந்த எதிரிகளையும், தெரியாத எதிரிகள் என அனைவரையும் ஒளித்து கட்டுவதற்கு இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

யானை பொம்மை

இது மிகவும் எளிமையான பரிகாரமாக தான் இருக்கும். வாஸ்துகளில் முக்கியமானதாக சொல்லப்படும் யானை பொம்மைகளை தான் இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகிறோம் அதனால் நமக்கு இரண்டு யானை பொம்மை தேவைப்படும் அதுவும் மண்ணால் செய்யப்பட்ட யானை பொம்மையாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மண்ணால் செய்யப்பட்ட யானை பொம்மை கிடைக்கவில்லை என்றாலும் பிளாஸ்டிக், பஞ்சு போன்ற யானை பொம்மைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்களை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தவே கூடாது.

பரிகாரம்

இப்படி எதிரிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து அவர்களை வீழ்த்துவதற்காக நாம் செய்யும் இந்த பரிகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் இரண்டு யானை பொம்மையை வரவேற்பு அறையில் வடக்கு திசையை பார்தவாறு ஒரு பொம்மையை வைக்க வேண்டும். இன்னொரு பொம்மையை கிழக்கு திசை பார்த்தவாறு நிறுத்தி வைக்க வேண்டும். இப்படி நாம் செய்யும்போது நமக்கு தொல்லை தர நினைக்கும் எதிரிகளின் மனநிலையை மாற்றிவிடும். அது மட்டும் இல்லாமல் நமது வீடு வரை வந்து நம்முடனே இருக்கும் எதிரிகளுக்கு நமக்கு தொல்லையாக அவர்கள் செய்ய நினைக்கும் காரியங்களை செய்ய விடாமல் அவர்கள் மனநிலையையும் மாற்றிவிடும். அவர்களின் எந்த விதமான கெட்ட எண்ணங்களும் உங்களிடம் நெருங்கவே நெருங்காது.

-விளம்பரம்-

எருக்கன் பூ மாலை

மேலும் இந்த இரண்டு பொம்மைகள் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வைக்கும் போது உங்களின் எதிரிகளையும் தோற்கடிதது. உங்கள் வீட்டிற்கு ஒரு நல்ல செல்வ செழிப்பையும் தரும் அதனால் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரித்து உங்கள் வீட்டில் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த பரிகாரத்தை செய்தவதுடன் உங்கள் வீட்டில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரே வழிபட்டு அவருக்கு எருக்கன் பூ மாலையை சாற்றி என் எதிரிகளின் தொல்லையில் இருந்து என்னை விடுவிக்கவும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இதுவும் உங்களுக்கு நல்ல பலனை தரக்கூடியது நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here