வீடு கட்டும் பொழுது பொதுவாக நாம் வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமையலறை என்று வரும் பொழுது அதற்கு ஒரு கூடுதல் கவனம் தேவைதான். ஏனென்றால் சமையலறை வாஸ்துபடி சரியாக அமைந்து விட்டால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் வாழ்பவருக்கு நன்மையை அதிகரித்து தரும் என்பது முன்னோர்கள் கூற்று. நமது வீட்டின் பொருளாதார நிலைமையை கூறுவதில் சமையலறைக்கும் பெரும் பங்கு உள்ளது. நாம் சமையலறையை வாஸ்துபடி மிக நேர்த்தியாக வடிவமைத்து விட்டால் நாம் திட்டமிட்டது போல ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை நாம் வாழலாம்.
சமையலறை அமைய வேண்டிய திசை
சமையலறையை வடிவமைக்கும் பொழுது நாம் அதனை தென்கிழக்கு திசையில் வடிவமைக்க வேண்டும். ஏனென்றால் அக்னி பகவான் தென்கிழக்கு திசையில் தான் வாசம் செய்வார் இப்படி நாம் செய்கையில் நம் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து நலமான வாழ்வை வாழலாம். அது மட்டுமல்லாமல் வடக்கு வடகிழக்கு தென்மேற்கு திசைகளில் நாம் சமையலறையை வடிவமைப்பதை தவிர்க்க வேண்டும்.
சமையலறை உபகரணங்களின் திசை
கேஸ் அடுப்புகள், அடுப்புகள், சிலிண்டர்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் பிற சாதனங்கள் நெருப்பைக் குறிக்கின்றன, எனவே அவையும் தென்மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும். சமைக்கும் போது நபர் கிழக்கு நோக்கி இருக்கும் வகையில் வைக்கவும்.
தண்ணீர் குழாய்கள்
தண்ணீர் குழாய்கள் சமையலறை வடிகால்கள் மற்றும் கழுவும் தொட்டி ஆகியவற்றை நாம் வடக்கு அல்லது வடகிழக்கு திசை நோக்கி வைக்க வேண்டும். இது முற்றிலும் தென்கிழக்கு திசைக்கு எதிரான ஒன்று இப்படி செய்கையில் வடக்கு மற்றும் தெற்கு திசைகளுக்கு இடையில் உள்ள சமநிலையை நம்மளால் சரியாக பராமரிக்க முடியும்.
உணவின் திசை
நாம் சமைத்து முடித்த பின்னர் நாம் சமைத்த அனைத்து உணவு பொருட்களையும் அடுப்பிற்கு வலது புறத்தில் வைக்க வேண்டும். ஏனென்றால் அன்னபூரணி வடக்கு திசையில் தான் வாசம் செய்வாள், அப்படி வைக்கையில் நமது ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். இடது திசையில் வைத்தால் இதற்கு எதிர்மறையான ஒன்று நிகழும்.
குளிர்சாதன பெட்டியின் திசை
அனைவரின் சமையலறையில் இருக்கும் இந்த சாதனம் எப்போதும் தென்மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இது வாழ்க்கையில் உள்ள தடைகளை கடக்க உதவும்.
சமையலறையின் நிறம்
சமையலறையில் நிறங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாஸ்து படி சமையலறைக்கு மிகவும் சிறந்த நிறம் பச்சை, ஏனெனில் இது பசியைத் தூண்டுகிறது மற்றும் குடும்பத்தில் நல்லிணக்கத்தை வளர்க்கிறது. நீங்கள் பச்சை நிறத்தை விரும்பவில்லை என்றால் அதற்கு பதில் மஞ்சள் நிறத்தை முயற்சிக்கலாம்.