- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு இதெல்லாம் சாப்பிடுவது வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். வாழைப்பூ சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்பப்பைக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதனால அடிக்கடி வாழைப்பூ உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வாழைப்பூ வைத்து வாழைப்பூ வடை வாழைப்பூ பொரியல் வாழைப்பூ குழம்பு இதெல்லாம் செய்யலாம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம வாழைப்பூ வைத்து ஒரு சூப்பரான கூட்டு செய்ய போறோம்.
இந்த வாழைப்பூ கூட்டு ரசம் சாதத்துக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுடச்சுட சாதத்தில் இந்த கூட்டு போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாக்கணும். வாழைப்பூ சேர்த்துக் கொள்வதால் இயற்கையான முறையில் நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் அதனால அதை மிஸ் பண்ணாம வாரத்துல ரெண்டு தடவையாவது சேர்த்துக்கணும்.
காரக்குழம்பு வச்சு இதை சைடிஷ் ஆக வைத்துக் கொண்டால் சாப்பிடுவதற்கே அவ்ளோ ருசியாக இருக்கும். ஒரு சிலர் இதுல பருப்பு போட்டும் செய்வாங்க உங்களுக்கு தேவைப்பட்டால் இதுல பாசிப்பருப்பு போட்டு செய்யலாம். இல்லையென்றால் இந்த மசாலா மட்டும் சேர்த்து செய்யலாம் ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான வாழைப்பூ கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாழைப்பூ 65 இனி இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
வாழைப்பூவை சுத்தம் செய்து கழுவி குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சோம்பு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து அதனை வாழைப்பூவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை பெரிய வெங்காயம் சேர்த்து தாளித்து சேர்த்துக் கொண்டால் சுவையான வாழைப்பூ கூட்டு தயார்.






