சூப்பரான வாழைப்பூ தயிர் வடை இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!
வடையை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். டேஸ்டியான வடை செய்வதென்பது நம் தென் இந்தியாவில் பொதுவாக விசேஷ நாட்களில் செய்யப்படும். அதிலும் தயிர் வடை என்றால் பலரும் விருப்பமாக உண்பார்கள். தயிர்வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு வகை. வடை செய்து அதனை தாளித்த தயிர் கலவையில் ஊற வைத்து
வடையை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். டேஸ்டியான வடை செய்வதென்பது நம் தென் இந்தியாவில் பொதுவாக விசேஷ நாட்களில் செய்யப்படும். அதிலும் தயிர் வடை என்றால் பலரும் விருப்பமாக உண்பார்கள். தயிர்வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு வகை. வடை செய்து அதனை தாளித்த தயிர் கலவையில் ஊற வைத்து சாப்பிடுவதே தயிர்வடை என்று கூறப்படுகிறது. பொதுவாக தயிர்வடை கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் ஆனால் அதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். அந்த வடையை சாம்பார் அல்லது தயிரில் போட்டு சாப்பிடுவது என்றால் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அப்படி, வடையின் காரசாரமும் தயிரின் புளிப்பும் சேர்த்து சுவையாக எப்படி தயிர் வடை செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் டீ, காபி குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் எதையேனும் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட வடை தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். வாழை மரத்தின் பல பாகங்கள் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது வாழைக்காய் கொண்டு பொரியல் மற்றும் சாம்பார் செய்யப்படுகிறது. வாழைத்தண்டு பலவிதங்களில் உணவில் சேர்க்கப்படுகிறது. வாழைப்பூ பொரியல், மற்றும் வாழைப்பூ கூட்டு மிகவும் பிரபலமான மதிய உணவு வகை. அதேபோல வாழைப்பூ கொண்டு வடையும் செய்யலாம். ஸ்நாக்ஸ் என்றால் முதலில் தோன்றுவது வாழைப்பூ வடை தான். பெரும்பாலான பிள்ளைகள் வாழைப்பூ வடை என்றாலே நோ சொல்லி விடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான வாழைப்பூ தயிர் வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : உரலில் இடித்த ஆட்டுக்கறி வடை இப்படி சுட்டுப் பாருங்க! இந்த டேஸ்டை வாழ்க்கைல மறக்கவே மாட்டீங்க!