- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
அசைவத்தில் மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை இதெல்லாம் செஞ்சி இருப்பீங்க ஆனா சைவத்தில் இதே மாதிரி ஒரு தடவை வாழைக்காய் வச்சு கோலா உருண்டை செஞ்சு பாருங்க. சைவத்தில் இதே மாதிரி மீல்மேக்கர் வச்சு கோலா உருண்டை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அதே மாதிரி ஒரு தடவை இந்த வாழைக்காய் வைத்தும் கோலா உருண்டை செஞ்சு பாருங்க. வாழைக்காய் வச்சு வாழைக்காய் வறுவல், வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் பஜ்ஜி இதெல்லாம் செஞ்சு இருப்பீங்க.
ஒரு தடவை வாழைக்காய் வச்சு இந்த மாதிரி கோலா உருண்டையும் செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த சுவையான வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபியை செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதுமானது. இதுக்கு கடலை மாவு அரிசி மாவுன்னு எதுவுமே சேர்க்க தேவையில்லை. இந்த ரெசிபியை செஞ்சு மாலை நேரத்தில் டீ காபியோட சேர்த்து சாப்பிடுங்க. எப்பவும் ஒரே மாதிரியா பஜ்ஜி வடை இன்னும் சாப்பிடாம இந்த மாதிரி ஒரு தடவை கோலா உருண்டை மாதிரி செஞ்சு சாப்பிடுங்க.
இதுல வெங்காயம் பூண்டு இஞ்சி எல்லாமே சேர்த்து வதக்கி அரைச்சு செய்வதால் வாசனையா இருக்கும். சோம்பு சேர்க்கிறதால வாசனை ரொம்பவே அற்புதமாக இருக்கும். வாழைக்காய் வச்சு இந்த மாதிரி ஒரு அருமையான ரெசிபி நீங்க இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க வாழைக்காய் வச்சு இந்த சுவையான கோலா உருண்டை ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாழைக்காய் வைத்து எத்தனையோ ரெசிபியை செய்திருப்பீர்கள் அந்த வகையில் இந்த வாழைக்காய் மிளகு வறுவலையும் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
வாழைக்காயை இரண்டாக நறுக்கி குக்கரில் சேர்த்து ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
தோல் உரித்து அதனை மசித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் பூண்டு தேங்காய் துருவல் மஞ்சள் தூள் சோம்பு சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து எடுக்கவும்.
அந்த விழுதை வாழைக்காயுடன் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனை சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வாழைக்காய் கோலா உருண்டை தயார்.






