Home சைவம் ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட காரசாரமான ருசியில் வாழைக்காய் மிளகு‌ வறுவல் இப்படி ட்ரை...

ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட காரசாரமான ருசியில் வாழைக்காய் மிளகு‌ வறுவல் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. வாழைக்காய் நம் உடல் நலத்திற்கு அவசியமான ஒரு காய்கறி ஆகும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை அகற்றுகிறது. எனவே மலச்சிக்கலுக்கு வாழைக்காய் உணவு அருமையான தீர்வு. காய்கறிகளிலே வாழைக்காய் என்றாலே சிலருக்கு அலர்ஜி தான். குழந்தைகள் கூட உருளைக்கிழங்கு, கருணை கிழங்கு சாப்பிடும் அளவிற்கு வாழைக்காயை சாப்பிடுவதில்லை.

-விளம்பரம்-

இந்த வாழைக்காய் இப்படி மட்டும் செய்தால் போதும் வாழைக்காய் பிடிக்காது என்பவர்கள் கேட்டு வாங்கி சாப்பிடுவது. அந்த வகையில் வாழைக்காயை வறுவலாகவும், குழம்பாகவும் நம்முடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காயில் அதிகபட்சமாக பலரும் பொரியல் தான் செய்ய யோசிப்பார்கள். ஆனால் அதில் அட்டகாசமான சுவையில் மிளகு வறுவல் செஞ்சு பாருங்க.‌ உங்க வீடே மணக்கும். அப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க. இந்த மிளகு வறுவலை சட்டுனு 10 லிருந்து 15 நிமிடத்தில் செய்துவிடலாம். சுவைக்கு எந்த குறையும் இருக்காது. சுடச்சுட சாதத்தில் கொஞ்சம் இந்த வாழைக்காய் மிளகு வறுவலை வைத்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்.

Print
2.67 from 3 votes

வாழைக்காய் மிளகு‌ வறுவல் | Vazhakkai Milagu Varuval Recipe In Tamil

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. வாழைக்காய் நம் உடல் நலத்திற்கு அவசியமான ஒரு காய்கறி ஆகும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை அகற்றுகிறது. எனவே மலச்சிக்கலுக்கு வாழைக்காய் உணவு அருமையான தீர்வு. காய்கறிகளிலே வாழைக்காய் என்றாலே சிலருக்கு அலர்ஜி தான். குழந்தைகள் கூட உருளைக்கிழங்கு, கருணை கிழங்கு சாப்பிடும் அளவிற்கு வாழைக்காயை சாப்பிடுவதில்லை. இந்த வாழைக்காய் இப்படி மட்டும் செய்தால் போதும் வாழைக்காய் பிடிக்காது என்பவர்கள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Vazhakkai Milagu Varuval
Yield: 4 People
Calories: 74kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 வாழைக்காய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 வர ‌மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

  • முதலில் வாழைக்காயை தண்ணீரில் அலசி விட்டு தோல் நீக்கி வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகு, சீரகம், சோம்பை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ அதே கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் எண்ணையிலேயே, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், சோம்பு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் வாழைக்காய், நாம்‌ பொடித்து வைத்துள்ள மிளகு தூள், பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணையிலேயே நன்கு வதக்கவும். வாழைக்காய் வெந்ததும் கறிவேப்பிலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான, சுலபமான வாழைக்காய் மிளகு வறுவல் தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு சைட்டிஷ்ஷாக மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 74kcal | Carbohydrates: 22g | Protein: 9.1g | Fat: 2.8g | Sodium: 3mg | Potassium: 22mg | Fiber: 2.6g | Vitamin A: 64IU | Calcium: 15mg | Iron: 2.6mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் வாழைக்காய் சேவ் பொரியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!