- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
மதுரையில ரொம்ப ஃபேமஸான கறி தோசை யாருக்கு தான் பிடிக்காது எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க டேஸ்ட்டும் அட்டகாசமா தரமா இருக்கும். இந்த சூப்பர் டேஸ்டான கறி தோசைக்கு நிறைய பேரு அடிமையாகிடுவாங்க. அந்த வகையில அருமையான இந்த கறி தோசையை அதுவும் சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு சூப்பரான சைவ கறி தோசை தான் பார்க்க போறோம். உங்க வீட்டில மீல் மேக்கர் இருந்தா போதும் இந்த சைவ கறி தோசையை சூப்பரா செஞ்சுடலாம். நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்ட்ல உங்களுக்கு கிடைக்கும்.
கறி தோசை சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா சிக்கன் மட்டன் எதுவும் வாங்க முடியாத நேரத்துல இந்த சைவ கறி தோசையை வீட்ல முயற்சி செஞ்சு பாருங்க. டேஸ்ட் பயங்கரமா இருக்கும். இந்த சைவ கறி தோசைக்கு சைட் டிஷ்ஷா சாம்பார் சட்னி குருமா அப்படினு எது வேணாலும் செஞ்சு சாப்பிடலாம். இல்லனா அப்படியே கூட எந்த சைடு டிஷ்ஷும் இல்லாமல் இந்த சைவ கறி தோசையை சாப்பிடலாம். உங்க குழந்தைகளுக்கு இதை செஞ்சு கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த அட்டகாசமான சூப்பர் டேஸ்டான சைவக் கறி தோசை எப்படி ஈசியா செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எப்போதும் ஒரே மாதிரியான தோசை செய்து சலித்து விட்டதா ? சர்க்கரை வள்ளி கிழங்கு தோசையை ருசியாக இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் கறி தோசைக்கு ஊற்ற வேண்டிய முட்டைக்கு பதிலாக சைவ முட்டையாக கடலை மாவு மைதா மாவு பேக்கிங் சோடா உப்பு மிளகு தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
மீல் மேக்கரை பத்து நிமிடங்கள் சுடுதண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை பிழிந்து எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு, ஏலக்காய் சோம்பு தூள் கருவேப்பிலை பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா, தனியாத்தூள் சீரகத்தூள் தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
லேசாக எண்ணெய் பிரிந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்து நன்றாக பத்து நிமிடத்திற்கு கிளறி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் அனைத்தும் ஒன்றாக வந்த பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.
ஒரு தோசை கல்லில் ஊத்தப்பம் மாதிரி தோசை ஊற்றி அதன் மேல் கலந்து வைத்துள்ள கடலை மாவு கரைசலை ஊற்றி மாவோடு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு தயார் செய்து வைத்துள்ள சைவ கறி கலவையை தோசை மேல் வைத்து எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான சைவ கறி தோசை தயார்.






