- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் உணவு கலச்சாராத்தில் பல வித உணவு வகைகள் பெருகி விட்டன. இவை தவிர பாராம்பரிய உணவுகளை மாடார்ன் உணவுகளாக மாற்றும் முயற்சிகளும் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் நம்முடைய வீடுகளிலும், கிராமத்திலும் செய்யப்படும் உணவுகளின் சுவையே தனிதான். அந்த வகையில் நம்முடைய கோவில்களில் தயார் செய்து கொடுக்கப்படும் பொங்கல், சுண்டல் மற்றும் புளியோதரைகளுக்கேன தனித்துவமான டேஸ்ட் உண்டு. அவற்றை நாம் உண்ணும்போதே அதே போன்று நாமும் தயார் செய்ய வேண்டும் என்றும் தோன்றும். இருப்பினும் அதற்கான பக்குவம் பலருக்கு தெரியாது. அப்படி ஒரு சுவையில் எப்படி செய்வது போன்று நினைத்து மனதை குழப்பி கொள்ள வேண்டாம். காஞ்சிபுரம் கோவில் ஸ்டைல் புளியோதரைக்கான ரெசிபி.
கோவில் பிரசாதங்களில் புளியோதரைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. சுட சுட நெய் மணக்க மணக்க இருக்கும் புளியோதரை கண்டிப்பாக இன்னொரு முறை வாங்கி சாப்பிடலாம் என்று தான் பலரும் நினைப்பார்கள். சிலர், தயங்காமல் போய் வரிசையில் நின்று வாங்கியும் சாப்பிடுவார்கள். வீடுகளில் செய்யும் புளியோதரை கூட கோவிலில் தரும் சுவையில் இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு புளியோதரை பிரியர்கள் நம் ஊரில் அதிகம். அதுமட்டுமில்லை லஞ்ச் பாக்ஸ் ஈஸி ரெசிபியாகவும் இந்த புளியோதரை உள்ளது. காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாளுக்கு செய்யக்கூடிய கோவில் புளியோதரை பிரசாதம் ரெசிபி தான் இது. சரியான அளவுகளில் பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி உங்களுடைய வீட்டில் புளியோதரை செய்து பாருங்கள். காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரையின் சுவை அப்படியே கிடைக்கும். கோவில் புளியோதரை பிரியர்களுக்காகவே இந்த ஸ்பெஷல் ரெசிபி.
இதனையும் படியுங்கள் : ஊரை போல உணவிலும் தெய்வீக மனம், சுவையுடன் கூடிய காஞ்சிபுரம் இட்லி ஆவி பறக்க இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மல்லி, கடலை பருப்பு, உளுந்து பருப்பு, வர மிளகாய், மிளகு, எள்ளு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, வேர்க்கடலை, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு இதனுடன் நாம் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இந்த புளி கரைசல் நன்கு கொதித்ததும் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு பின், வெல்லம் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான காஞ்சிபுரம் கோவில் புளியோதரை தயார். வெள்ளை சாதத்துடன் சிறிது அளவு எண்ணெய் மற்றும் புளி கலவை ஊற்றி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.






