- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் முக்கனிகளான மாம்பழம் பலாப்பழம் வாழைப்பழம் இது மூன்றுமே சரியான இனிப்பு சுவை கொண்டது. அதனாலேயே இந்த மூன்று பழங்களும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல பலாப்பழத்தில் இருக்கக்கூடிய கொட்டையை தூக்கி போடாம அத வச்சு நிறைய ரெசிபிஸ் செய்யலாம். பலாப்பழம் சீசன்ல நிறைய பலாக்கொட்டை கிடைக்கும். அந்த பலாக்கொட்டையை வச்சு பலாக்கொட்டை கிரேவி, பலாக்கொட்டை பிரியாணி பலாக்கொட்டை சுக்கா அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செய்யலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம அந்த பலாக்கொட்டையை வச்சு ஒரு சூப்பரான சிம்பிளான பொரியல் செய்ய போறோம்.
இந்த சிம்பிளான பொரியல் செய்வதற்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. தூக்கி போடுற பலாக்கொட்டையை வச்சு ஒரு அருமையான ரெசிபி செய்ய முடியும் அப்படின்னா கண்டிப்பா செய்யலாம். இந்த சுவையான பலாக்கொட்டை பொரியல் தயிர் சாதம் ரசம் சாதம், சாம்பார் சாதம் எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த சுவையான பலாக்கொட்டை பொரியல் கண்டிப்பாக உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதனால இனிமேல் பலாக்கொட்டை கிடைச்சுதுனா கண்டிப்பா மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான பலாக்கொட்டை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வெரைட்டி ரைஸ் க்கு பலாக்கொட்டை சுக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
Ingredients
Method
ஒரு குக்கரில் பலாக்கொட்டையை சுத்தம் செய்து சேர்த்து உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பிறகு வேக வைத்த பலாக்கொட்டையை இரண்டாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
மஞ்சள் தூள் மிளகாய் தூள் சீரகத்தூள் சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக வதக்கி இறக்கினால் சுவையான பலாக்கொட்டை பொரியல் தயார்.






