- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மீல் மேக்கர் 65, மீல் மேக்கர் கிரேவி, மீல் மேக்கர் பிரியாணி இது எல்லாமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். மீல் மேக்கர் வெச்சு எந்த ரெசிபி செஞ்சாலும் அந்த ரெசிபி அவ்வளவு சூப்பரா இருக்கும் அப்படின்னே சொல்லலாம். சுவையான மீல் மேக்கர் ரெசிபி அசைவ சுவையில் செஞ்சா எப்படி இருக்கும். அந்த மாதிரி ஒரு அசைவ சுவையில் இருக்கக்கூடிய மீல்மேக்கர் வறுவல் தான் இப்ப பார்க்க போறோம். அசைவம் வீட்டில் எடுக்க முடியாத சமயத்துல மீல் மேக்கர் வச்சு ஒரு சூப்பரான அசைவ சுவைல இருக்கக்கூடிய வறுவல் செய்யலாம். இதுக்கு நம்ம ஒரு மூணு பொருட்கள் போட்டு வறுத்து அரைச்சு பொடி பண்ணி சேர்க்க போறோம்.
அந்த பொடி தான் நல்ல வாசனையை கொடுக்கும். இதுக்கு சின்ன சைஸ்ல இருக்கிற மீல்மேக்கரும் பயன்படுத்தலாம் பெரிய சைஸ்ல இருக்கிற மீல்மேக்கரும் பயன்படுத்தலாம். இதுல நிறைய ப்ரோடீன் சத்துக்கள் இருக்கிறதால சைவ பிரியர்கள் புரோட்டீன்காக இதை நிறையவே சாப்பிடலாம். இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. ரசம் சாதம் சாம்பார் சாதம் பிரியாணி எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு அப்படியே கூட பிசைந்து சாப்பிடலாம். டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும்.
சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பாக எல்லாருமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. வீட்ல பெருசா எந்த காய்கறிகளுமே இல்லை அப்படின்னா கூட நீங்க இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். இந்த சுவையான ரெசிபிக்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது. வீட்ல இருக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே போதுமானது. குறைவான பொருட்கள் வச்சு ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சுடலாம். வீடு மணமணக்க அசைவ சுவையில் ஒரு சூப்பரான மீல்மேக்கர் வறுவல் தயாராகிவிடும். இப்ப வாங்க இந்த சுவையான மீல் மேக்கர் வறுவல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான மீல்மேக்கர் கட்லெட் இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ஸ்நாக்ஸ் ரெடி!
Ingredients
Method
ஒரு கடாயில் சோம்பு மிளகு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கியதும் மீல்மேக்கரை ஊற வைத்து பிழிந்து சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் அரைத்து வைத்த பொடி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
இப்பொழுது நன்றாக தண்ணீர் வற்றி வெந்ததும் இறக்கினால் சுவையான மீல்மேக்கர் வறுவல் தயார்.






