- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
குழந்தைகளுக்கு பயிறு வகைகள் கொடுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. பயிறு வகைகளில் நிறைய இருக்கு மொச்சை பயிறு, தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, சுண்டல், பட்டாணி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில அப்படியே தாளிச்சு கொடுத்தோம் அப்படின்னா குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க. அப்போ அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நம்ம ஏதாவது செஞ்சு கொடுக்கணும் அந்த வகையில தான் இப்ப நம்ம தட்டைப்பயிறு வச்சு ஒரு சூப்பரான பிரியாணி செய்ய போறோம். பிரியாணி என்றும் சொல்லலாம். தட்டைப்பயிறு சாதம் அப்படின்னும் சொல்லலாம்.
இந்த சாதம் இந்த மாதிரி ஒரு செய்முறையில் ஒரே ஒரு தடவை செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா போதும் குழந்தைகள் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. வேண்டாம் அப்படின்னு சொல்லவே மாட்டாங்க. குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன ரெசிபி கொடுக்கிறது என்று ஒரே கன்பியூஸ்டா இருந்துச்சுன்னா இந்த மாதிரி சூப்பரான ஆரோக்கியமான தட்டைப்பயிறு சாதம் செஞ்சு கொடுங்க. தட்டைப்பயிறு வச்சு ஒரு சூப்பரான காரக்குழம்பு வச்சு சாப்பிடலாம் ஆனா அந்த மாதிரி வச்சு கொடுத்தா குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க அதனால பிரியாணி மாதிரி செஞ்சு கொடுத்து குழந்தைகளை ஏமாத்தி சாப்பிட வச்சு விடலாம்.
இந்த தட்டைப்பயிறு சாதம் செய்வதற்கு தட்டை பயிறை 8 மணி நேரம் நல்ல ஊற வச்சுக்கோங்க. அப்பதான் நல்லா வெந்து சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு தட்டு கூட சாப்பிடுவாங்க. இதுக்கு சைட் டிஷ் கூட தேவை இல்லை. தேவைப்பட்டால் தயிர் பச்சடி வெள்ளரிக்காய் பச்சடி ஏதாவது வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான தட்டை பயறு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை மிளகு மசாலா செய்து ரசம் சாதம் கூட வச்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!
Ingredients
Method
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம் இடித்த பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு எட்டு மணி நேரம் ஊற வைத்த தட்டைப்பயிறை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிளகாய் தூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போனதும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஊற வைத்த அரிசியை சேர்த்து நெய் மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி இரண்டு விசில் விட்டு இறக்கினால் சுவையான தட்டை பயறு சாதம் தயார்.






