- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast
வீட்டிலும் காலை உணவு எப்பொழுதும் பெருமளவில் தோசையாக தான் இருக்கிறது. தோசையுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், தக்காளி சட்னி, குருமா இதுபோன்ற சைட் டிஷ்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஒருமுறை இந்த வெஜிடபுள் சீஸ் தோசையை செய்து பாருங்கள். வெஜிடபுள் பொரியலை தனியாக சமைத்து கொடுத்தால் பலரும் விருப்பமாக உண்பதில்லை.
ஆனால் இங்கு காய்கறி வெஜிடபுள் சீஸ் தோசை போன்று செய்து, சாப்பிடும் பொழுது மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் மிகவும் விருப்பமாகவே சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த வெஜிடபுள் சீஸ் தோசை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தோசை எப்போது பார்த்தாலும் வெறும் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் நிச்சயமாக யாருக்கும் பிடிக்காது. குழந்தைகளுக்கு கொஞ்சம் வித்தியாசமாக, வித்தியாசமான பொருட்களை சேர்த்து அலங்கரித்து ரோஸ்ட் செய்து கொடுத்து பாருங்கள். தோசை பிடிக்கவே பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட இப்படி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையான சிம்பிளான வெஜிடபுள் சீஸ் தோசை, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Ingredients
Method
தேவையான பொருட்களை தயாராக. எடுத்து வைக்கவும். காலிஃப்ளவரை சிறிதாக உதிர்த்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைக்கவும்.
உருளைக்கிழங்கை ஃபிங்கர் சிப்ஸ் வடிவில் நறுக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கவும், வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். காலிஃப்ளவர், காரட், பட்டாணி ஆகியவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
(அனைத்து காய்களையும் கிழங்கு உட்பட - இட்லி தட்டில் ஒரே ஈட்டில் வேகவைத்து எடுக்கலாம்). அடுப்பில் தோசைக் கல்லை காயவைத்து, தோசை மாவை எடுத்து சற்று கனமான தோசையாக ஊற்றவும்.
(அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வேக வைத்த காய்கறிகளையும், நறுக்கிய தக்காளியையும் தோசை மேல் தூவி அலங்கரிக்கவும்.
பிறகு சீஸ் துண்டுகளையும் மேலே தூவவும். தோசையை மூடி போட்டு, மிதமான தீயில் அப்படியே வேகவிடவும்.(திருப்பிப் போட வேண்டாம்).காய்கறிகள் ஏற்கனவே வெந்திருப்பதால்.
சீஸ் முழுவதும் உருகிவிடாமல் வேசாக சூடாகி, மென்மையாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். சுவையான வெஜிடபுள் சீஸ் தோசை தயார்.
தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.






