- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
பொதுவா வீட்ல மீந்து போன சப்பாத்தி இருந்தா அதை கட் பண்ணி முட்டை சப்பாத்தி செய்வோம். கொத்து சப்பாத்தி செய்வோம் அப்படி இல்லன்னா அதுல ஜாம் வச்சு அப்படியே சுருட்டி சாப்பிடுவோம் ஆனா இனிமேல் மீந்து போன சப்பாத்தி இருந்துச்சுன்னா அதை வைத்து ஒரு ரிச்சான சூப்பரான எக் சீஸ் சப்பாத்தி செஞ்சு பாருங்க. இதுல நிறைய காய்கறிகள் இருக்கிறதால ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு உணவாக மாறிவிடும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா உங்க வீட்ல இருக்கிற குழந்தைகள் அதுக்கப்புறம் அடிக்கடி கேட்பாங்க.
அந்த அளவுக்கு இந்த வெஜிடபிள் எக் சீஸ் சப்பாத்தி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இதுக்கு நீங்க எந்த சீஸ் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். காய்கறிகளும் உங்களுக்கு என்னென்ன காய்கறிகள் தேவையோ அந்த காய்கறிகள் சேர்த்து செய்யலாம். இதுல நம்ம இன்னைக்கு பீன்ஸ் கேரட் குடைமிளகாய் சேர்த்து செய்ய போறோம் மூன்று முட்டை மட்டும் சேர்த்தால் போதுமானது. மீததமான சப்பாத்தியில தான் இந்த ரெசிபி செய்யனும் அப்படின்ற அவசியம் இல்ல புதுசா சப்பாத்தி போட்டு கூட இந்த ரெசிபியை செய்யலாம். குழந்தைகளுக்கு எக்ஸாம் முடிஞ்சு லீவு விட்டுட்டாங்க.
அப்படின்னா கண்டிப்பா அவங்க டிஃபரண்டா ஏதாவது கேட்டுகிட்டு இருப்பாங்க. அந்த மாதிரி கேட்கிற குழந்தைகளுக்கு இந்த சுவையான ரெசிபியை செஞ்சு கொடுங்க. கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. ஃபர்ஸ்ட் ஆம்லெட் போட்டு அதுக்கு மேல ஒரு சப்பாத்தி வச்சு அதுக்கு மேல சீஸ் போட்டு அதுக்கு மேல ஒரு சப்பாத்தி வச்சு நாலு ஐந்து தடவை திருப்பி போட்டு நல்லா வேக வச்சு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சப்பாத்தியா பிச்சு பார்த்தா சீஸியா பாக்குறதுக்கு அவ்வளவு சூப்பரா இருக்கும்.
கண்டிப்பா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க வீட்ல இருக்குற குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சப்பாத்தி சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். ஆரோக்கியமான சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பாக வீட்ல செஞ்சு பாருங்க. காலையில பிரேக் பாஸ்ட்க்கு குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம். மதியம் லஞ்சுக்கும் கூட குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா மீதம் வைக்காமல் சாப்பிட்டு முடிச்சிடுவாங்க இப்ப வாங்க இந்த சுவையான வெஜிடபிள் எக் சீஸ் சப்பாத்தி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய குடை மிளகாய் நறுக்கிய பீன்ஸ் கேரட் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் வதக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
மூன்று முட்டையை அதில் சேர்த்து மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஆம்லெட் போன்று அந்த கலவையை ஊற்றி அதன் மேல் ஒரு சப்பாத்தியை வைத்து வெந்ததும் திருப்பி போடவும்.
பிறகு அதன் மேல் சீஸ் சேர்த்து மறுபடியும் ஒரு சப்பாத்தி சேர்த்து இரண்டு மூன்று முறை திருப்பிப்போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் எக் சீஸ் சப்பாத்தி தயார்.






