- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவா காய்கறிகள் சாப்பிடுவது நம் உடம்புக்கு நிறைய ஆரோக்கியத்தை கொடுக்கும். ஆனா நிறைய பேரு காய்கறிகள் சாப்பிடாமல் அதை தவிர்த்து விட்டு நொறுக்கு தீனிகளா வாங்கி சாப்பிடுவாங்க. ஆனா அந்த மாதிரி நம்ம சாப்பிடுறது உடம்புக்கு பல தீமைகளை உண்டாக்கும். பொதுவா நம்ம நிறைய காய்கறிகள் சேர்த்து சாம்பார் செய்வோம் அவியல் செய்வோம் ஆனா இன்னைக்கு நம்ம நிறைய காய்கறிகள் சேர்த்து ஒரு சூப்பரான வெஜிடபிள் சப்ஜி செய்ய போறோம். இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, சோயா பிரியாணி, குஸ்கா அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட் ஆன காம்பினேஷனா இருக்கும்.
சைவ பிரியர்களுக்கு இந்த சப்ஜி ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும் அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டான ஒரு சப்ஜி ரெசிபி இது. சுட சுட சாதத்தில் கூட போட்டு நம்ம பிசைந்து சாப்பிடலாம். அவ்ளோ ருசியாக இருக்கும். இந்த ருசியான டேஸ்ட்டான வெஜிடபிள் சப்ஜி ரெசிபி ஒரு தடவ கண்டிப்பா வீட்ல ட்ரை பண்ணி பாருங்க எப்பவும் ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம இந்த மாதிரி செஞ்சு பாருங்க. இதுல உங்களுக்கு பிடித்தமான காய்கறிகள் எல்லாமே சேர்த்துக் கொள்ளலாம்.
நம்ம இப்போ காலிஃப்ளவர் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி பன்னீர் எல்லாம் சேர்த்து செய்யப் போறோம். உங்களுக்கு தேவையான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் இதே காய்கறிகளை கூட சேர்த்துக் கொள்ளலாம் டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுற மாதிரியான ஒரு ரெசிபி இது. இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் சப்ஜி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுப்பாத்தியுடன் சாப்பிட ருசியான குடைமிளகாய் சப்ஜி இப்படி செய்து பாருங்க!!
Ingredients
Method
காலிஃப்ளவர் கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு அனைத்தையும் அரைவேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பன்னீரை நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அதில் மிளகாய் தூள் மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் காய்கறிகள் மற்றும் பன்னீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கொத்தமல்லி இலைகள் தூவி இரண்டு நிமிடத்தில் இறக்கினால் சுவையான வெஜிடபிள் சப்ஜி தயார்.






