- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- LUNCH
வெந்தய தோசை, வெந்தயக் கஞ்சி, வெந்தயக் களி, வெந்தயக் குழம்பு, வெந்தய காபி, வெந்தய சாதம் என பலவகையில் வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. வெந்தயத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கும். ரத்த விருத்திக்கு உதவும். வெந்தயம் ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. இதை வைத்து கிரேவி, குழம்பு என்று ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் சமைத்துக் கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு உடலுக்கு செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள்.
ஒருமுறை வெந்தயத்தில் இப்படி சாதம் வைத்து சுடச்சுட போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இந்த சாதம் சாப்பிடுவதற்கு மட்டுமின்றி குழந்தைகளின் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருவதற்கும் மிகவும் முக்கியமாக இருக்கிறது, எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த சாதத்தை செய்து கொடுங்கள். வழக்கமான சாதத்தைவிட இதுபோன்ற சாதத்தை செய்யும்போது நமது லஞ்ச் பாக்ஸ் சீக்கிரம் காலியாகிவிடும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இது உருளைக்கிழங்கு வருவல், மற்றும் சிப்ஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான வெந்தய கீரை குழம்பு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க எவ்வளவு செய்தாலும் காலியாகும்!
Ingredients
Method
முதலில் வெந்தயத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு ஆறு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் ஊற வைத்த வெந்தயம் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு, புதினா, கொத்தமல்லி, அரிசியை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
அதன் பிறகு குக்கரை திறந்து சிறிதளவு நெய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் ஆரோக்கியமான வெந்தய சாதம் தயார்.






