- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவா கீரை அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. கீரையில் நிறைய வகைகள் இருக்க வெந்தயக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, குப்பை கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, தண்டுக்கீரை, பாலக் கீரை அப்படின்னு சொல்லி கிட்டே போகலாம். இந்த ஒவ்வொரு கீரைகளையும் வைத்து நம்ம ஒவ்வொரு ரெசிபி செஞ்சாதான் அந்த கீரையை நம்ம ருசிச்சு சாப்பிட முடியும். வாரத்துல மூணு தடவை கீரைகளை நம்ம உணவில் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும். முக்கியமா இரும்புசத்து நிறையவே கிடைக்கும் ஹீமோகுளோபின் உடம்பில் அதிகரிக்கும். அதனால கண்டிப்பா வாரத்துல மூணு தடவை கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில இன்னைக்கு நம்ம வெந்தயக்கீரை வச்சு ஒரு சூப்பரான வெந்தயக்கீரை பருப்பு கூட்டு தான் செய்யப் போறோம். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ சூப்பரா இருக்கும். கொஞ்சம் கெட்டியா வச்சுக்கிட்டா புளிக்குழம்பு ரசம் சாதம் எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த சுவையான பருப்பு கூட்டு ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இந்த பருப்பு கூட்டு ரெசிபி செய்வதற்கு நம்ம ஒரு தேங்காய் பச்சை மிளகாய் எல்லாமே அரைச்சு ஊத்த போறோம்.
அது இன்னும் ரொம்ப டேஸ்டா இருக்கும் இந்த டேஸ்டான வெந்தயக்கீரை பருப்பு கூட்டு ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க ஒரு தடவை செஞ்சுட்டா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கீரையை பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு நீங்க துவரம் பருப்பு கூட சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் நம்ம பாசிப்பருப்பு சேர்த்து இப்போ இந்த கூட்டு செய்ய போறோம். இப்ப வாங்க இந்த வெந்தயக்கீரை பருப்பு கூட்டு ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு பாலக்கீரை தோசையை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சாப்பிட அருமையாக இருக்கும்!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் இருக்கு கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய பூண்டு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பாசிப்பருப்பை தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்த வெந்தயக்கீரை சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி சீரகம் பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து அந்த விழுதை சேர்த்துக் கொள்ளவும்.
வேக வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக சேர்த்து கிளறி பத்து நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான வெந்தய கீரை கூட்டு தயார்.






