எலியும் பூனையுமாய் இருக்கும் மாமியார் மருமகள் சண்டையில்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!

- Advertisement -

குடும்பம் என்றாலே சண்டை சச்சரவுகள் இருக்க தான் செய்யும். என்னதான் நாம் சமாதானமாக போனாலும் ஏதோ ஒரு காரணத்தால் குடும்பத்தினுள் சண்டை வரத்தான் செய்யும். அந்த சண்டை சமாதானம் ஆகிவிட்டால் நல்லது சமாதானமாகாமல் நீண்டு கொண்டே சென்றால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இதில் குறிப்பாக மாமியார் மருமகள் சண்டை இது என்னதான் நாம் சமாதானம் செய்ய முயற்சித்தாலும் நம்மால் முடியாது. ஆனால் ஆன்மீகத்தில் எப்பேர்பட்ட சண்டையையும் தீர்த்து வைப்பதற்கு ஒரு பரிகாரம் உள்ளது அது என்ன என்பதனை பற்றி பதிவில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

மாமியார் மருமகள் சண்டை

மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்று மாமியார் மருமகள் சண்டையை பற்றிய பழமொழி ஒன்று இருக்கிறது. மாமியார் என்ன செய்தாலும் தவறு இல்லை, ஆனால் மருமகள் தவறு செய்து விட்டால் அதை ஒரு குற்றமாக தான் கருதுவார்கள். அல்லது மருமகள் என்ன செய்தாலும் அதற்கு சண்டையிட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். இந்த நிலையை நம்மளால் மாற்ற இயலாது. இதனால் தான் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று அழிவின் விளிம்பில் மேல் இருந்து கொண்டிருக்கிறது. இதே மாமியாரும் மருமகளும் சண்டை சச்சரவுகள் இன்றி அன்போடு இருந்தால் கூட்டுக் குடும்பம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழும்.

- Advertisement -

இந்த மாமியார் மருமகள் பிரச்சனையை தீர்ப்பதற்கு தீபம் ஏற்றினாலே போதும். அந்த தீபத்தை மாமியார் ஏற்றலாம் அல்லது மருமகள் ஏற்றலாம் அல்லது இருவரும் சேர்ந்தே ஏற்றலாம். திடீரென்று புதிதாக ஒரு விளக்கை வீட்டில் ஏற்றும்பொழுது அதனால் சண்டைகள் ஏற்படும் என்னும் சூழ்நிலையில் மருமகளின் தாயார் தன் மகளும் அவள் மாமியாரும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்து அவர்கள் வீட்டிலேயே இந்த தீபத்தை ஏற்றலாம்.

தீபம் ஏற்றும் முறை

அகல் விளக்குகளை வாங்கி அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் அதில் ஐந்து மிளகு மட்டும் சிறிது சீரகம் சேர்த்து இரண்டு திரிகளையும் ஒன்றாக்கி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நீங்கள் விருப்பப்பட்டால் தினமும் ஏற்றலாம், அல்லது எப்பொழுதெல்லாம் சண்டை ஏற்படுகிறதோ அப்பொழுது ஏற்றலாம். இல்லை சண்டே வரக்கூடாது என்று விரும்பினால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றி வர வேண்டும். அதிலும் இந்த விளக்கினை மாலை 6 மணிக்கு ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை மாமியார் மருமகள் சண்டைக்கு மட்டும்தான் ஏற்ற வேண்டும் என்று இல்லை. கணவன் மனைவிக்கிடையில் சண்டை ஏற்பட்டாலும் இந்த தீபத்தை ஏற்றலாம். தந்தை மகனுக்கு இடையில் சண்டை ஏற்பட்டாலும் இந்த தீபத்தை ஏற்றலாம். மொத்தத்தில் குடும்பத்தில் இருக்கும் எந்த நபர்களுக்கு இடையில் சண்டை ஏற்படுகிறதோ அந்த நபர்கள் சண்டையில் இருந்து விலகி மன ஒற்றுமையுடன் வாழ இந்த தீபத்தை நாம் ஏற்றலாம்.

-விளம்பரம்-