பணம் சம்பாதிப்பது கூட அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. ஒரு நாளைக்கு ஒருவர் ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிப்பதற்கு உண்டான வழிமுறைகள் இன்னைக்கு இருக்கு. இன்னைக்கு வரும் 1000 ரூபாயை செலவு செய்து விட்டு, நாளைக்கு பணம் தேவை எனும்போது கடன் வாங்கக் கூடிய பழக்கத்தை வைக்கக்கூடாது. இங்கு யாருக்கு தான் பணம் தேவை இல்லாமல் உள்ளது, எல்லோருக்கும் பண தேவை அதிகமாக உள்ளது. அந்த தேவையை நம்மளால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் பக்கத்தில் கடன் வாங்குவோம். ஆனால் கடன் வாங்காமல் அவரை அதிகரித்துக் கொள்ள ஆன்மீகத்தில் பல பரிகாரத்தை கூறியுள்ளனர் அதில் ஒன்றான விலக்கு பரிகாரத்தை பற்றி பதிவில் காண்போம்.

விளக்கு ஏற்றுவதில் உள்ள சூட்சம்
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வத்திற்கென ஒவ்வொரு நாளில் வழிபடுவோம். ஆனால் பெண்கள் அனைவரும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கமான ஒன்று. விளக்கு ஏற்றுவதில் பல சூட்சுமங்கள் அடங்கியுள்ளன. எப்படி விளக்கு ஏற்ற வேண்டும் என்று நம் முன்னோர்கள் பல வழிகளில் நமக்கு கூறி உள்ளனர். அதில் ஒன்றை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
உங்கள் வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தாம்பூல தட்டிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த தாம்பூல தட்டின் மேல் வெற்றிலை மற்றும் ஒரு கொட்டை பாக்கை எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை மேல் ஒரு ரூபாய் நாணயத்தை மூன்று மூன்றாக ஒன்பது நாணயங்கள் எடுத்து வைத்து விடுங்கள்.

விளக்கு ஏற்றும் முறை
பின்னர், இந்த நாணயத்தின் மேல் காமாட்சி விளக்கை எடுத்து வைத்து, அதற்கு எண்ணெய் மற்றும் நெய் கலந்து ஊற்றி, திரி இட்டு, சில நறுமண பூக்களை விளக்கின் மேல் வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எப்பொதும் போல் விளக்கு ஏற்றி விடுங்கள். இவ்வாறு நாம் விளக்கு ஏற்றும்போது நமக்கு இருக்கும் பண கஷ்டங்கள் எல்லாம் நீங்கி பண வரவு அதிகரிக்கும். நாம் வைக்கும் வெற்றிலையை விளக்கு ஏற்றும் போது ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதில் இருக்கும் நாணயத்தை மாற்றாமல் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பரிகாரத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருப்பேன். இம்முறையை பின்பற்றி உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றி பண தடையை நீக்கி பணவரவை அதிகரித்து நல்வாழ்வை வாழுங்கள்


