Home சைவம் ருசியான கிராமத்து ஸ்டைல் வெண்டைக்காய் கார குழம்பு இப்படி செய்து பாருங்க!!

ருசியான கிராமத்து ஸ்டைல் வெண்டைக்காய் கார குழம்பு இப்படி செய்து பாருங்க!!

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவார்கள். கொண்டைக்கடலை, சேனைக்கிழங்கு கார குழம்பு, வெங்காய கார குழம்பு, கத்தரிக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் காரக்குழம்பு,என பல வகைகள் உண்டு.

இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான மாங்காய் கார குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

இந்த புளி குழம்பு புளிப்பும் காரமும் சேர்ந்து அட்டகாசமான சுவையைக் கொடுக்கும். கார குழம்பு பொதுவாக முருங்கை, கத்தரி போன்ற காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் வெண்டைக்காயால் செய்யப்படும் காரக் குழம்பு பெரிதும் ஆசைக்குறியது. வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் அதனை தேங்காய் சேர்த்து புளிக்குழம்பு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-
Print
1 from 1 vote

கிராமத்து வெண்டைக்காய் காரக்குழம்பு | Village Style Ladys Finger Gravy

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவார்கள். கொண்டைக்கடலை, சேனைக்கிழங்கு கார குழம்பு, வெங்காய கார குழம்பு, கத்தரிக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் காரக்குழம்பு,என பல வகைகள் உண்டு. கார குழம்பு பொதுவாக முருங்கை, கத்தரி போன்ற காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் வெண்டைக்காயால் செய்யப்படும் காரக் குழம்பு பெரிதும் ஆசைக்குறியது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian
Keyword: kara kulambu
Yield: 4 People
Calories: 18kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • புளி எலுமிச்சை
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 பெரிய
  • 1 தக்காளி
  • 10 சின்ன
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • ஒரு அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காய், நறுக்கிய பெரிய வெங்காயம், வெந்தயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • இதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் புளியை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கரைத்துக்கொள்ளவும்.
  • பின் அடுப்பில் அதே கடாயில் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும்போது அத்துடன் தக்காளியும் சேர்த்து கொதிக்க விடவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், வெங்காயம், சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அத்துடன் தேவையான உப்பையும் சேர்த்து கொள்ளவும்.
  • வெண்டைக்காய் குழம்பு கொதித்த பிறகு தான் சேர்க்க வேண்டும் முதலிலேயே சேர்த்து விட்டால் குழம்பு கொழகொழவென்று ஆகிவிடும்.
  • குழம்பின் பச்சை வாசனை போன பிறகு அதில் வெண்டைக்காய் சேர்த்து வேகவிடவும்.
  • வெண்டைக்காய் ஏற்கனவே வதக்கி இருப்பதால் அது பாதி வெந்திருக்கும் அதனால் சிறிது நேரம் வேக விட்டால் போதுமானது.
  • குழம்பு கொதித்து கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
  • இப்போது சூடான சுவையான காரசாரமான கிராமத்து வெண்டைக்காய் கார குழம்பு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 18kcal | Carbohydrates: 3.6g | Protein: 1.53g | Fat: 0.2g | Sodium: 8mg | Potassium: 303mg | Fiber: 2g | Vitamin C: 21.1mg | Calcium: 375mg