- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து கிரேவி, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம்.
இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். சிக்கன், மட்டன் சாப்பிட்டு போர் அடித்துவிட்டால் இந்த வார இறுதியில் இறால் வாங்கி கிராமத்து ஸ்டைலில் குழம்பு வையுங்கள்.
இந்த இறால் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த இறால் குழம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பானது இறால் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடும் வகையில் இருக்கும். இறால் குழம்பு சப்பாத்தி, இட்லி, தோசை, சோறு என அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு சூப்பரான அசைவ உணவாகும். இதனை கிராமத்து மணம் மறாமல் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆம்பூர் இறால் பிரியாணி
Ingredients
Method
முதலில் இறாலை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி நறுக்கிய கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
பின் புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு தயார்.






