வாழ்கையில் எதற்கு பயம் இல்லாமல் இருக்க வேண்டுமா ? யாராலும் உங்களை வெல்ல முடியாத இந்த இரண்டு பொருள் போதும்!

- Advertisement -

இந்த உலகில் யாரும் எனக்கு பயமே இல்லை என்று சொல்லிவிட முடியாது ஒவ்வொருவருக்கு ஒரு சில விஷயங்களில் பயமிருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் சிலருக்கு மூன்றாவது மனிதர்களிடம் பேசுவதற்காக பயப்படுவார்கள் ஏன் அவர்கள் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது புதிதாக ஒருவர் அறிமுகமானார் என்றால் அவ்வளவுதான் பேசவே மாட்டார்கள் அந்த அளவிற்கு மனது தைரியம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் எதற்கு எடுத்தாலும் பயந்து கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களும் மற்றும் ஒரு சிலர் எந்த காரியம் எடுத்தாலும் அந்த காரியம் தடங்கல் ஆகி தோல்வியில் சென்று முடியும் இப்படிப்பட்டவர்களும் நினைத்த காரியம் வெற்றியில் முடிவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் பார்க்கலாம் வாருங்கள்.

பல அற்புதங்கள் புரியும்

நீங்கள் இந்த பரிகாரத்தை மட்டும் சரியான முறையில் செய்துவிட்டால் போதும் வாழ்க்கையை நினைத்து நீங்கள் துளியளவும் கூட பயப்படத் தேவையில்லை மன தைரியம் இல்லாதவர்களுக்கு மன தைரியம் ஏற்படும். ஏன் உங்களுக்கு இருக்கும் கண்ணுக்கு தெரிந்த எதிரிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத எதிரிகளான கண் திருஷ்டி, எதிர்மறை சக்திகள் போன்ற எந்த சக்திகள் நினைத்தாலும் உங்களை வெல்ல முடியாது அந்த அளவிற்கு இந்த பரிகாரம் உங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களில் நடத்தும் சரி பாருங்கள் அது என்ன பரிகாரம் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

எலுமிச்சை பழம், அருகம் புல்

நம் வாழ்க்கையில் யாராலும் நம்ம வீழ்த்த முடியாத அளவிற்கு மன தைரியம் படைத்தவராக மாற வேண்டுமானால் இந்த இரண்டு பொருள்கள் தான் தேவை ஒன்று மஞ்சள் நிற எலுமிச்சை பழம் மற்றொன்று பச்சை நிறத்தில் இருக்கும் அருகம்புல் இந்த இரண்டு பொருட்கள் உங்கள் கையில் இருந்தால் போதும் விநாயகர் பெருமாளும், குரு பகவானும் உங்களுடனே இருப்பார்கள். அதனால் காலையில் எழுந்ததும் சுத்த பத்தமாக குளித்து முடித்துவிட்டு சூரியனை பார்த்து நமஸ்காரம் வைத்து விட்டு இரண்டு பொருட்களை உங்கள் கையுடன் வெளியே செல்லும்போது எடுத்துச் சென்றால் அன்றைய நாளில் நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியில் தான் முடியும்.

-விளம்பரம்-

பூஜை அறை

நீங்கள் எலுமிச்சை பழத்தையும் அருகம் புல்லையும் கையில் எடுத்துச் செல்வதற்கு முன்னதாக உங்கள் பூஜை அறையில் வழக்கம் போல் தயார் படுத்தி விளக்கு ஏற்றிவிட்டு மனதார விநாயகர் மற்றும் குரு பகவானை மனம் உருகி வேண்டி கொண்டு. இந்த எலுமிச்சம் பழத்தையும் அருகம் புல்லையும் நீங்கள் வைத்திருக்கும் ஹேண்ட் பேக் அல்லது மணி பர்ஸ் ஏதாவது ஒன்றில் வைத்துவிட்டு நீங்கள் எப்போதும் போல் தினசரி வேலையை பார்க்க வெளியில் செல்லுங்கள் இப்படி நீங்கள் செல்லும்போது உங்களுக்கு நடக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியில் சென்று தான் முடியும் மூன்று நாளைக்கு ஒரு முறை அருகம்புல்லையும் எலுமிச்ச பழங்களையும் மாற்றி விடுங்கள்.

பாதுகாப்பு கவசமாக

பொதுவாக நாம் ஒரு சிலர் வீடுகளுக்கு அல்லது ஒரு சில இடங்களுக்கு செல்வதற்கு சற்று தயக்கமாக இருக்கும் அதற்கான காரணமும் நமக்கு தெரியும் அங்கு சென்றால் நான் செல்லும் காரியம் சரியாக அமையாது என்று இருந்தாலும். அந்த இடத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை இருக்கும் போது பட்சத்தில் உங்கள் மனதில் இருக்கும் பயத்தை போக்க ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு செல்லுங்கள் அங்கு இருக்கும் எந்த விதமான கண் திருஷ்டியோ, எதிர்மறை ஆற்றலும் உங்கள் உடம்பில் ஊடுருவாமல் இருக்கும். ஏன் ஏவல், பில்லி, சூனியம் போன்ற எவையும் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும் அந்த அளவுக்கு சக்தி என்பது எலுமிச்சம் பழத்திற்கு உண்டு உங்களை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு கவசமாகவே செயல்படும்.

கோடி நன்மை

மேலும் குரு பகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள் நிறம் என்பதால் இந்த மஞ்சள் எலுமிச்சை பழத்தை நீங்கள் கையோடு வைத்திருக்கும் பொழுது குருபகவான் கோடி நன்மையும் உங்களுக்கு கிடைக்கும். விநாயகருக்கான அருகம்புல்லை நீங்கள் கையில் வைத்திருக்கும் போது எங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியை நோக்கி செல்லும் அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதை விநாயகரை பார்த்துக் கொள்வார் அதனால் வாழ்க்கை துளியளவும் பயம் இல்லாமல் போக வேண்டும் என்றால் இந்த இரண்டு பொருட்களை மட்டும் எப்போதும் கையில் வைத்துக் கொள்ளுங்கள் நம்பிக்கையுடன் இதை செய்யுங்கள் உங்களுக்கும் நல்ல பலனை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here