படிப்பு முடித்தும் வேலை கிடைக்கவில்லை, அப்படியே கிடைத்தாலும் தகுதிக்கு ஏற்ற, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை, போதிய சம்பளம் கிடைக்கவில்லை, குறைவான சம்பளம், வேலையில் பிரச்சனையில் என வாழ்கின்ற ஏராளமானோரை நாம் வாழ்வில் தினமும் பார்க்கிறோம். ஒருவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக வேலை என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.
அப்படியே வேலை கிடைத்தாலும் வேலை எப்போது போகும் என்ற பதை பதைப்பிலேயே பலரது வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. நல்ல வேலை கிடைக்குமா? வேலை கிடைத்தாலும் நிரந்தரமாகுமா? புரமோசனும் சம்பள உயர்வும் வருமா என்று ஏப்ரல் மாதத்தில் பலரது மனம் எதிர்பார்க்க ஆரம்பித்து விடும். வேலையில் இருக்கும் சிக்கல் தீரவும் புரமோனும், சம்பள உயர்வும் கிடைக்கவும் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு விநாயகப் பெருமானுக்கு எந்த மாலையை அணிவித்து வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

முழு முதற் கடவுள்
முழு முதற்கடவுளான விநாயகரே அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்குகிறார். அரச மரத்தில் இருக்கும் விநாயகரை வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வினைகளை தீர்ப்பவன் விநாயகன். எந்த செயல் செய்தாலும் நாம் அனைவரும் முதலில் வணங்குவது விநாயரைதான். அத்தகைய விநாயருக்கு இந்த பரிகாரத்தை முழு மனதோடும் நம்பிக்கையோடும் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும். உங்கள் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்தாலே போதுமானது.
பொதுவாக நாம் விநாயகருக்கு அருகம்புல் மாலை, ரோஜா பூ மாலை, எருக்கம் பூ மாலை இவற்றை அணிவித்து தான் அவரை வழிபடுவோம். இவ்வாறு நாம் வழிபடுவதனால் நமக்கு வேலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் நம்முள் பலருக்கும் உள்ளது. ஏனென்றால் அவருக்கு தேங்காய் உடைத்தால் நமக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் இருந்த இடம் இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது.

வாழைப்பழ மாலை
விநாயகருக்கு செய்யும் இந்த பரிகாரத்தை நாம் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் தான் தொடங்க வேண்டும். விநாயகருக்கு நாம் அனைத்து வகையான மாலைகளை அணிந்திருப்போம் ஆனால் குறிப்பாக வாழைப்பழத்தை நாம் மாலையாக செய்து அவருக்கு அணிவித்தால் அவர் மன மகிழ்ந்து நமக்கு இருக்கும் வேலை பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விடுவார்.
இந்த வாழைப்பழ மாலையை நாம் கற்பூரவள்ளி அல்லது செவ்வாழைப்பழம் இரண்டினைக் கொண்டுதான் செய்ய வேண்டும். அதில் ஒன்பது வாழைப்பழங்கள் உள்ளவாறு நாம் மாலை செய்து அவருக்கு அணிவிக்க வேண்டும். இவ்வாறு அவரை 12 வாரங்கள் தொடர்ந்து நாம் வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நம் வாழ்வில் நல்ல நிலைமையை அடையலாம்.

விரதம் இருந்து அகல் விளக்கு
அதுமட்டுமல்லாமல், சிவப்பு நிற மலர்கள், ரோஜா அல்லது செம்பருத்தி பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் நமக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து அந்த நாளில் விநாயகர் கோவிலுக்கு சென்று அகல் விளக்குகள் ஏற்றி வைத்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல தொழில் அமைய வேண்டும் என்று பிராத்தனை செய்தால் பல நம்மை வெற்றிகள் தேடி வரும்.