குடும்பத்தில் தீராத கஷ்டம் இருக்கா ? தொட்ட காரியம் எல்லா தோல்வியா ? விநாயகருக்கு இந்த பூஜை செய்யுஙகள்!

- Advertisement -

ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் அந்த குடும்பத்தில் சில கஷ்டம் நஷ்டங்கள் இருக்க தான் செய்யும். அது உங்கள் குடும்பமாக இருந்தாலும் சரி, அடுத்தவர்களின் குடும்பமாக இருந்தாலும் சரி, ஏழை குடும்பமாக இருந்தாலும் சரி, ஒரு பணக்கார குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் கஷ்டம் வருவது இயல்பான ஒன்றுதான். அதனால் எப்பொழுதும் கஷ்டத்தை கண்டு பயப்படக்கூடாது அதை நம் குடும்பமாக சேர்ந்து எதிர்கொள்ளும் பொழுது தான் நம் குடும்பம் ஒற்றுமையாகவும், திடமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். அதனால் அந்த கஷ்டத்தை முதலில் தீர்ப்பதற்கான வழிமுறைகளை தான் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு குடும்பத்திற்கு தீராத கஷ்டம் வந்து சேருகிறது, கையில் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தோல்விகள் தான் முடிகிறது என்றால் அதற்கு ஆன்மீக ரீதியான வழியில் நாம் சில பூஜைகளை செய்து சரி செய்யலாம். அதைப்பற்றி தான் நான் இந்த தொகுப்பில் தெளிவாக காணப் போகிறோம்.

-விளம்பரம்-

ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த காரியங்கள் செய்தாலும் அது தோல்வியில் தான் முடிகிறது என்றால் உதாரணமாக வீட்டில் சுப காரியங்களை செய்ய நான் நினைக்கும் போது அதற்கு இடையூறாக பல தடைகள் வரும் வீட்டில் நாம் திருமணம் குறித்து பேசும்போதும் நல்ல வரன் அமையாது அதற்கும் தடையாக பல கஷ்டங்கள் வரும் நாம் வேலைக்கு செல்லும் இடத்திலும் ஒரு இடத்தில் நிம்மதியான வேலை இல்லை என்று பேரிடத்தில் வேலைக்கு சென்றாள் அங்கு நிம்மதியான வேலை இருக்கும் ஆனால் சம்பளம் குறைவாக இருக்கும் இதுபோன்று நம் கால் வைக்கும் இடம் எல்லாம் கண்ணிவெடிகளாக இருக்கும் பட்சத்தில் விநாயகரை வேண்டி இந்த பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பூஜையை செய்வதற்கு நமக்கு ஒரு குண்டு மஞ்சளும், விநாயகரின் அம்சம் பொருந்திய அருகம்புல்லும் தேவைப்படும். நாம் வைத்திருக்கும் குண்டு மஞ்சளில் அருகம்புல்லை சுற்றி அதை ஒரு பாத்திரத்தில் வைத்த அதை பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். இதை நாம் 48 நாட்கள் விநாயகராக நினைத்து வழிபட வேண்டும். தினசரி காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பயபக்தியோடு நாம் செய்து வைத்திருக்கும் மஞ்சள் விநாயகர் முன்பு ஒரு அகல் விளக்கு ஏற்றி மனதில் விநாயகரை நினைத்து ” எங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் காற்றாய் கரைந்து போக வேண்டும், நாங்கள் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடிய வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்”.

இப்படி நீங்கள் வேண்டும் பொழுது விநாயகரின் அருளால் உங்கள் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து. நீங்கள் கையில் எடுக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றியில் தான் முடியும். மேலும் 48 நாட்களும் நீங்கள் அந்த மஞ்சளை விநாயகர் வழிபடுவதால் அந்த மஞ்சளில் சுற்றி இருக்கும் அருகம்புல் காய்ந்தவுடன் அதை எடுத்துவிட்டு புதியதாக வேறு அருகம்புல் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின் இடையில் ஏதாவது ஒரு நாள் வழிபட முடியாத சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அந்த நாளை தவிர்த்து விட்டு அடுத்த நாளிலிருந்து கணக்கு வைத்துக் கொள்ளலாம். பின் 48 நாட்கள் பூஜை நிறைவு பெற்றதும் அந்த மஞ்சள் கிழங்கை எடுத்து ஏதாவது ஒரு செடியின் அடியில் போட்டு விடுங்கள். அவ்வளவுதான் இந்த பூஜையை நீங்கள் செய்து முடித்து விட்டால் நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் தான் முடியும், உங்கள் குடும்ப கஷ்டம் முழுமையாக தீர்ந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here