இந்த உலகத்தில் உள்ள அனைவரும் படிப்படியாக முன்னேற வேண்டும் என்று உழைத்து சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். முன்னேற்றம் என்பது நாம் செய்யக் கூடிய அனைத்து விஷயங்களிலும் வர வேண்டும். வேலையில் மட்டும் தொழிலில் மட்டும் நமக்கு முன்னேற்றம் இருந்தால் போதாது பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சி உண்டாக வேண்டும் என்றால் தெய்வத்துடைய அனுகிரகம் நமக்கு தேவைப்படும். வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவதற்கு முருகப்பெருமானை வழிபடும் விதத்தைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதவியில் பார்க்கலாம்.

முருகப்பெருமான்
தமிழ் கடவுள் ஆன முருக பெருமான் பலவித சக்திகளை கொண்டவர். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக இருக்கக்கூடிய இவரை வழிபாடு செய்வதால் நமக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும். முருகப்பெருமானுக்கு உரிய செவ்வாய்க்கிழமை சஷ்டி திதி கிருத்திகை போன்ற நாட்களில் நாம் அவரை வழிபாடு செய்து வந்தால் மிகவும் சிறப்பானதாக அமையும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தையும் அடைய முடியும்.
செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு
முருகப்பெருமான் என்று சொன்னதுமே ஒரு சிலருக்கு நினைவுக்கு வருவது செவ்வாய்க்கிழமை தான். செவ்வாய்க்கிழமை என்று முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள். செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் முருகப்பெருமான் வழிபாடு சிறந்த தீர்வாக அமையும். செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் கோவிலுக்கோ அல்லது வீட்டிலோ வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை ஒரு சிலர் வைத்திருப்பார்கள். இதனை செய்வதால் வீட்டில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவதோடு நமக்கு தேவையான ஒரு சில வேண்டுதல்களையும் முருகப்பெருமான் நிறைவேற்றுவார்.
செவ்வாய்க்கிழமை வெற்றிலை தீபம்
செவ்வாய்க்கிழமை என்று செவ்வாய் ஹோரை நேரத்தில் ஒரு தட்டில் வெற்றிலைகள் ஆறு வைத்து கிழக்கு நோக்கியவாறு ஒரு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறந்தது. செவ்வாய் ஹோரை நேரம் என்பது காலை 6:00 மணியிலிருந்து 7.00 மணி வரை. மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணி வரை. இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணி வரை. இந்த நேரத்திற்குள் இந்த வெற்றிலை தீபத்தை முருக பெருமான் படத்திற்கு முன்பாக ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
முருகப்பெருமான் மந்திரம்
இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு தீபத்தை பார்த்தவாறு ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை முழு மனதோடு கூற வேண்டும். செவ்வாய் ஹோரை நேரத்தில் இந்த விளக்கை ஏற்றுவதால் முருகப்பெருமானின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும் குழந்தை பாக்கியம் பெற முடியும் திருமணம் தடைப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தீபத்தை ஏற்றுவது மனதிற்கும் நிம்மதியை கொடுக்கும். இந்த எளிமையான தீப வழிபாட்டை செய்து முருகப்பெருமானுடைய முழு அருளையும் பெறலாம்.
இதனையும் படியுங்கள் : வீடு வாங்குவதற்கான முருகன் பரிகாரம்


