இந்த பிரபஞ்சத்தில் நிறைய மாயைகளும் மர்மங்களும் நிறைந்துள்ளது நிறைய விடையில்லாத கேள்விகளும் கூட உள்ளது. பிரபஞ்சத்தை மனிதன் எப்படி பார்க்கிறானோ அப்படி பிரதிபலிக்க கூடியது மிகவும் அற்புதம் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில் இன்று பணம் தான் எல்லாமும் என்று ஆகிவிட்டது பணத்தை சம்பாதிப்பதற்கு பணத்தை கையாளுவதற்கு பணத்துடன் சில விளையாட்டுகளை நாம் தவிர்க்க வேண்டும். அதனைப் பற்றிய இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

மகாலட்சுமியின் அம்சம்
இந்த உலகத்தில் பணம் அதிகமாக யாரிடம் இருக்கிறதோ அவர்களிடத்தில் தான் பணம் அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கும். ஒருமுறை நாமும் அதனை பற்றி கொண்டால் பணம் நம்முடனே இருந்துவிடும். அதற்கான ஒரு சில ரகசியங்களை மட்டும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். படம் என்பது மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது செல்வங்களுக்கு சொந்தக்காரியாக இருக்கக்கூடிய மகாலட்சுமியின் அம்சம் பணம் என்பதால் அதனை நாம் ஒருபோதும் அவமதிக்கக் கூடாது.
பணத்தை வைத்து செய்யக்கூடாது சில விஷயங்கள்
வீட்டில் பணத்தை துடைத்து வைக்க கூடாது பணத்தை இடது கையால் யாருக்கும் கொடுக்கக் கூடாது. ஒரு சிலர் பணத்தை வீட்டில் ஆங்காங்கே போட்டு வைத்திருப்பார்கள் ஆனால் அப்படி போட்டு வைக்கக் கூடாது ஒரு சிலர் பணத்தை சமையல் அறையில் உள்ள டப்பாக்களில் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் வீட்டில் உள்ள வறுமைகள் நீங்க சமையல் அறையில் உள்ள பருப்பு டப்பா கடுகு டப்பா ஏதாவது ஒன்றில் போட்டு வைப்பது மிகவும் நல்லது.
குபேரனுக்கு பிடித்த சில்லறை நாணயங்கள்
சில்லரை நாணயங்கள் பஞ்சமில்லாமல் வீட்டில் இருந்தால் பணத்திற்கும் பஞ்சம் இருக்காது ஆனால் அதனை உண்டியலில் சேர்த்து வைக்கலாம் அல்லது சில்லரை நாணயங்களை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு பூஜை அறையில் வைக்கலாம். சில்லறை நாணயங்களின் சத்தம் குபேரனுக்கு மிகவும் பிடிக்கும். சில்லரை நாணயங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் கட்டு கட்டாய் பணம் சேரும். பணத்தை தூக்கி எறிந்து விளையாடவே கூடாது. வரவு செலவு கணக்கு எழுதும்போது ஒவ்வொரு முறை கணக்கு எழுதும் போதும் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து விட்டு பிறகு கணக்கு எழுத வேண்டும். பணத்துடன் எப்பொழுதும் பச்சை கற்பூரம் மற்றும் கிராமத்துண்டுகளை போட்டு வைத்தால் பணம் ஈர்க்கப்படும். நமக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று கூறும் கூற்று தவறானது. எனவே மற்றவர்களுக்கு உதவி செய்ய தயக்கம் காட்ட வேண்டாம் தேவைப்படுபவர்களுக்கு முடிந்த அளவிற்கு உதவி செய்தால் நம்மிடமும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். இதுவே பிரபஞ்சத்தின் பண விதியாகும்.
இதனையும் படியுங்கள் : ஆண்களுக்கான கடன் தீர்க்கும் பரிகாரம்


