மேஷம்

பேச்சு மற்றும் நடத்தையில் அதிக கட்டுப்பாடு தேவை. வாழ்க்கையில் விரும்பிய வெற்றியை அடைய நீங்கள் மிகுந்த பொறுமையுடன் முன்னேற வேண்டும். எதிர்ப்புகளை முறியடித்து தொழிலை நிலைப்படுத்த முனைப்போடு செயல்படுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த காரியங்களில் சிக்கல்கள் உருவாகலாம். வியாபாரத்தில் தடைகளை தாண்டி வெளியே வர போராடுவீர்கள். உங்கள் எண்ணப்படி திருமண காரியங்கள் சுலபமாக நடக்காது. மனைவி மக்களின் போக்கு மனதை காயப்படுத்தும். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்

வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது நன்மை பயக்கும். செல்வாக்கு மிக்கவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்வீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த வெற்றியை அடைந்து பூரிப்பு கொள்வீர்கள். நீண்ட காலமாக இழுவையில் இருந்த வழக்கை முடித்து வைப்பீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வியாபாரத்தில் பல வெற்றிகளை அடைவீர்கள். அதிக லாபம் கிடைக்கிறதே என்று அவசரப்பட்டு ஆபத்தான காரியங்களில் இறங்காதீர்கள். சாலையில் பயணிக்கும் போது வேலையைப் பற்றி சிந்திக்காதீர்கள்.
மிதுனம்

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலையில், சக ஊழியரின் உதவியுடன் உங்கள் இலக்கை திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே நிறைவேற்ற முடியும். உடைந்து போன உறவுகளை ஒட்ட வைப்பதற்காக பாடுபடுவீர்கள். மனைவியின் தேவையறிந்து நடந்து கொண்டு மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அவசரப்பட்டு அடுத்தவர் காரியங்களில் தலையிடாதீர்கள். ஆடம்பரமாக செலவு செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
கடகம்

இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்தது. நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெறலாம். உங்கள் வேலை, தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். கட்டுமான தொழில் கன ஜோராக நடக்கும். நிலம் வாங்கி விற்பதில் புதிய சாதனை படைப்பீர்கள். இழுபறியாக இருந்த இடப்பிரச்சனையை புத்திசாலித்தனமாக தீர்ப்பீர்கள். தாய்மாமன் வகையில் சில சங்கடங்கள் வரலாம். உறவினர்களுடன் ஒருமைப்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை நண்பர்களில் உதவியோடு சிறப்பாக முடிப்பீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் மிகுந்த லாபத்தை கொடுக்கும்.
சிம்மம்

இந்த வாரம் உங்கள் வேலையை நாளை வரை தள்ளிப் போடாதீர்கள். சோம்பல் மற்றும் பெருமையை தவிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும் அதில் உங்களுக்கு தோல்வி தான் கிடைக்கும். புதிதாகத் தொடங்கும் தொழிலுக்கு நண்பர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். போட்டி போட்டு தொழிலில் வெற்றி கண்டு எதிரிகளை பொறாமைப்பட வைப்பீர்கள். போட்டி பந்தயங்களில் மிகப்பெரிய லாபத்தை அடைவீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். அரசாங்க ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் பெறுவீர்கள்.
கன்னி

பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். சில முக்கியமான விஷயங்களில் விரும்பிய வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் குறித்த நேரத்தில் நிறைவேறும். கூட இருந்தே உங்களை கெடுக்க நினைத்த உறவினர்களின் உள்நோக்கத்தை இந்த வாரத்தில் தெளிவாக புரிந்து கொள்வீர்கள். அவர்களிடம் இருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. முதலீட்டுக்கு தகுந்த வருமானம் கிடைப்பது சற்று சிரமம். போட்டி பந்தயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். வாக்கு சாதுரியத்தால் வியாபாரத்தில் மிகவும் முன்னேற்றம் காண்பீர்கள்.
துலாம்

இந்த வாரம் எதிர்பார்த்த லாபத்தையும் வெற்றியையும் தரும். உங்கள் கடின உழைப்பு பலனளிக்கும். ஒரு குறிப்பிட்ட வேலையில் நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். ஆனால் இரு மடங்கு எச்சரிக்கையோடு எதையும் செய்யுங்கள். உடலில் ரத்த காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நல்ல நண்பர்களே விரோதியாக மாறி தொழிலுக்கு இடையூறு செய்வார்கள். அரசாங்க விரோதத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். வேலைக்காக நீங்கள் செய்திருந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதில் சுணக்கம் உண்டாகும்.
விருச்சிகம்

இந்த வாரம், எந்த ஒரு வேலையையும் யோசிக்காமல், அவசரப்பட்டு செய்யாதீர்கள். அதேபோல, உடல்நலம் மற்றும் உறவுமுறைகளிலும் மிகவும் கவனமாக இருங்கள். பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த இரவு பகலாக உழைப்பீர்கள். புதிய முதலீடுகள் மூலம் தொழிலை விரிவுபடுத்தி உற்பத்தி பெருக்கத்தை உண்டு பண்ணுவீர்கள். புதிய யுக்திகள் மூலமாக வியாபாரத்தில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்வீர்கள். பழைய கடன்கள் மள மள என்று வசூல் ஆகும். சிறு வியாபாரிகள் அபிரிமிதமான லாபத்தை பார்ப்பார்கள்.
தனுசு

இந்த வாரம் நீங்கள் உங்கள் நேரம், பணம் மற்றும் ஆற்றலை சரியாக நிர்வகிக்க வேண்டும், இல்லையெனில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக செலவு காரணமாக வரவு செலவுத் திட்டம் தடைபடலாம். எந்த தொழிலை தொட்டாலும் ஏற்றத்தை கொடுக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பதற்கு உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். புதிய வீடு கட்டி பழைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேலை தேடியவர்களுக்கு நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகலும்.
மகரம்

இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலன்களையும் வெற்றிகளையும் தருகிறது. திட்டமிட்ட காரியங்கள் சரியான நேரத்தில் மற்றும் விரும்பிய முறையில் முடிவடையும். வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் சகோதர சகோதரிகளால் வில்லங்கம் உண்டாகும். தொழில் துறைகள் சீராக நடக்கும். வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாத நிலை உண்டாகும். உறவினர் வகையில் ஏதாவது வில்லங்கம் வந்து மன அமைதியை கெடுக்கும். உதவி செய்வதாக எண்ணி உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
கும்பம்

இந்த வாரம் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமானதாகவும் இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில், வாழ்வாதாரம் தொடர்பான ஆசைகள் நிறைவேறும். வார தொடக்கத்தில் பண வரவுகள் கூடும். யாருக்காக நீங்கள் பாடுபடுகிறீர்களோ அவர்களே உங்களை புரிந்து கொள்ளாமல் மனம் நோகும்படி நடந்து கொள்வார்கள். மிக கவனமாக செயல்பட வேண்டிய காலம். வீட்டை புதுப்பித்து வர்ணம் தீட்டி அழகு படுத்துவீர்கள். மனையாளுக்கு நகைகள் வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் தாமதம் இன்றி பணம் கிடைக்கும்.
மீனம்

இந்த வாரம் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளை மேற்கொள்ளும் போது, எதிர்பார்த்த வெற்றியும் நன்மையும் கிடைக்கும். பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆன்மீக மற்றும் சுப காரியங்களில் நேரத்தை செலவிடுவீர்கள். நில விற்பனையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். வெளியூரிலிருந்து தொழிலுக்கு சாதகமான செய்தி வந்து சேரும். ஆன்மீகப் பெரியோர்களின் சந்திப்பு குடும்பத்தில் அமைதியை கொண்டு வரும். சமுதாயத்தில் அந்தஸ்து மிக்க மனிதராக காட்சியளிப்பீர்கள். தாயாருக்கு உடல் நிலையை பாதிப்பு ஏற்படலாம்.
இதனையும் படியுங்கள் : 2025 ஆம் ஆண்டில் பண மழையில் நனைய போகும் சில ராசிகள்!


