Advertisement
சைவம்

வீட்ல தோசை மாவு இல்லையா அப்போ இந்த கோதுமை மிளகு வெங்காய தோசை செய்யலாம்

Advertisement

நம்ம என்னதான் சப்பாத்தி பூரி பொங்கல் உப்புமா என்று செஞ்சாலும் நம்ம வீட்ல அடிக்கடி செய்யக்கூடியது இட்லியும் தோசையும் தான். இட்லியை விட தோசை தான் நம்ம வீட்ல அதிகமா செய்வோம் அதுக்கு எப்பவுமே நம்ம வீட்ல மாவு ஆட்டி ரெடியா வைத்திருப்போம் பசிக்குதுன்னு யாராவது கேட்டாங்க நான் சட்டுனு ரெண்டு தோசை செஞ்சு கொடுத்திடுவோம். ஆனா ஒரு சில நேரம் நம்ம வீட்ல தோசை மாவு இருக்காது அந்த மாதிரி சமயத்துல என்ன செய்றது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும்.

அந்த சமயத்துல உங்க வீட்டுல கோதுமை மாவு, அரிசி மாவு இருந்தா மட்டும் போதும் சுவையான சூப்பரான கோதுமை மிளகு வெங்காய தோசை செஞ்சு கொடுக்கலாம். இது செம டேஸ்டா இருக்கும். இந்த கோதுமை மிளகா வெங்காய தோசை செஞ்சு கூடவே தேங்காய் சட்னியோ இல்ல தக்காளி சட்னியோ வச்சு கொடுத்தா போதும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. உடல் எடையை கம்மி பண்ணனும் அப்படின்னு நினைக்கிறவங்களும் இந்த கோதுமை தோசை சாப்பிடலாம் ரொம்பவே நல்லது.

Advertisement

குழந்தைங்க ஸ்கூல்ல இருந்தும் காலேஜ்ல இருந்தும் பசியோட வரும்போது வீட்டில் எந்த தோசை மாவும் இல்ல அப்படின்னா சட்டுனு கோதுமை மாவு இருந்துச்சுன்னா இந்த சூப்பரான தோசையை சுட்டு கொடுக்கலாம் காலையில வீட்ல செஞ்ச மீதி குழம்பு இருந்தா கூட அதை வைத்து கொடுக்கலாம் எல்லா வகையான சைடு டிஷ் கும் இந்த வெங்காய தோசை ரொம்ப டேஸ்டியா சூப்பரா இருக்கும். குழந்தைகளும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சர்க்கரை நோயாளிகள் வயதானவர்கள் எல்லாருமே இந்த கோதுமை மிளகு வெங்காய தோசை சாப்பிடலாம் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான சட்டுனு செய்யக்கூடிய கோதுமை மிளகு வெங்காய தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

கோதுமை மிளகு வெங்காய தோசை | Wheat Pepper Onion Dosa

Advertisement
Print Recipe
குழந்தைங்க ஸ்கூல்ல இருந்தும் காலேஜ்ல இருந்தும் பசியோட வரும்போது வீட்டில் எந்த தோசை மாவும் இல்ல அப்படின்னா சட்டுனு கோதுமை மாவு இருந்துச்சுன்னா இந்த சூப்பரான தோசையை சுட்டு கொடுக்கலாம் காலையில வீட்ல செஞ்ச மீதி குழம்பு இருந்தா கூட அதை வைத்து கொடுக்கலாம் எல்லா வகையான சைடு டிஷ் கும் இந்த வெங்காய
Advertisement
தோசை ரொம்ப டேஸ்டியா சூப்பரா இருக்கும். குழந்தைகளும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சர்க்கரை நோயாளிகள் வயதானவர்கள் எல்லாருமே இந்த கோதுமை மிளகு வெங்காய தோசை சாப்பிடலாம் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான சட்டுனு செய்யக்கூடிய கோதுமை மிளகு வெங்காய தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Wheat Pepper Onion Dosa
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 354

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 2 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • மிளகு மற்றும் சீரகத்தை தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, நறுக்கிய கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் நறுக்கிய பச்சைமிளகாய், தேவையான அளவு உப்பு  அனைத்தும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
  • தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தோசையாக ஊற்றி இருபுறமும் நன்றாக வெந்தவுடன் எடுத்தால் சுவையான கோதுமை மிளகு வெங்காய தோசை தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான தக்காளி தோசை இப்படி செய்து கொடுத்து பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

12 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

23 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago