Advertisement
இனிப்பு பொருள்

கோதுமை ரவா கேசரி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

Advertisement

ரவா கேசரி என்றால் எல்லோருக்கும் விருப்பமான ஒரு எளிமையான ஸ்வீட் வகையாக இந்தியர்களுக்கு உண்டு. இந்த கோதுமை ரவை கேசரி பார்ப்பதற்கே நல்ல நிறமாகவும், சுவையாகவும் இருக்கிறது. என்ற நிறமிகளையும் சேர்க்க வேண்டாம். கோதுமை கேசரி அப்படியே கைகளில் எடுத்தால் கைகளில் ஒட்டாது ருசியாக இருக்கும்.

இனிப்பு என்றாலே பிடிக்காத குழந்தைகள் கிடையாது, ஆனால் அந்த இனிப்பை நம் உடலுக்கு ஆரோக்கியமான இந்த கோதுமை நாட்டுசக்கரை, கருப்பட்டி இது போன்ற நம் பாரம்பரிய பொருட்களில் செய்வதென்றால் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான வகையில் செய்து கொடுக்கலாம். தான் அவர்களின் ஆரோக்கியத்தை நல்ல முறையில் காக்க முடியும். அந்த வகையில் இன்று நாம் கோதுமை ரவை, நாட்டுச் சர்க்கரை கொண்டு சுவையான கேசரி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Advertisement

கோதுமை ரவை கேசரி | Wheat Rava kesari Recipe In Tamil

Print Recipe
ரவா கேசரி என்றால் எல்லோருக்கும் விருப்பமானஒரு எளிமையான ஸ்வீட் வகையாக இந்தியர்களுக்கு உண்டு. இந்த கோதுமை ரவை கேசரி பார்ப்பதற்கேநல்ல நிறமாகவும், சுவையாகவும் இருக்கிறது. என்ற நிறமிகளையும் சேர்க்க வேண்டாம். கோதுமைகேசரி அப்படியே கைகளில் எடுத்தால் கைகளில் ஒட்டாது ருசியாக இருக்கும். ஆரோக்கியத்தை நல்ல முறையில் காக்க முடியும்.அந்த வகையில் இன்று நாம் கோதுமை ரவை, நாட்டுச் சர்க்கரை கொண்டு சுவையான கேசரி எப்படிசெய்வது என்று தெரிந்து கொள்வோம்.
Course sweets
Cuisine tamil nadu
Keyword Wheat Rava kesari
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் கோதுமை ரவை
  • 3/4 கப் நாட்டு சக்கரை
  • 5 முந்திரி பருப்பு
  • 5 பாதாம் பருப்பு
    Advertisement
  • 5 கிஸ்மிஸ் பழம்
  • 3 தேக்கரண்டி நெய்
  • 2 ஏலக்காய்
  • 2 1/2 கப் சூடான தண்ணீர்

Instructions

  • முந்திரி பருப்பை சிறுசிறுத் துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். அதைப் போல் பாதாம் பருப்பை இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தவாவில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி அதை சூடுபடுத்திக் கொள்ளவும்.
  • தவா சூடானதும் அதில் கோதுமைரவையை போட்டு 2 நிமிடம் வாசம் வரும் வரை வறுக்கவும்
    Advertisement
  • வறுத்த கோதுமை ரவையிலிருந்து வாசம் வரும் போது அதில் 2 கப் சூடான தண்ணீரை ஊற்றவும். தண்ணீர் ஊற்றிய பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை வேக விடவும்.
  • ஏலக்காயை ஒரு சிறிய உரலில் அல்லது அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும். கோதுமை ரவை நன்கு வெந்தவுடன் அதனுடன் சீனியை சேர்த்து ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.
  • நாட்டுசக்கரை சேர்த்து கிளறிய பின்னர், அதில் மேலும் 1/2 கப் சூடான தண்ணீரை ஊற்றி கிளறி விடவும்.மேலே ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
  • கோதுமை ரவை கலவை நன்றாக வெந்து அதில் இருந்து நெய் வெளியே வர ஆரம்பிக்கும் போதுஏலக்காய்தூள் போட்டு இறக்கி வைத்து விடவும்.
     
  • ஒரு பாத்திரத்தில் அல்லது சிறிய வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் உடைத்து வைத்திருக்கும் அண்டிபருப்பு, கிஸ்மிஸ் பழம், பாதாம் பருப்பு ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். 12. வறுத்து வைத்திருக்கும் அண்டிபருப்பு,கிஸ்மிஸ், பாதாம் பருப்பை கேசரியில் போட்டு கிளறி விடவும்.
     
  • சுவையான கோதுமை கேசரி தயார், சூடாக இருக்கும் போதே இதனை பரிமாறவும்.

Nutrition

Carbohydrates: 27.7g | Protein: 3.9g | Fat: 9.1g | Cholesterol: 4mg | Sodium: 6.8mg | Potassium: 160mg | Calcium: 47.1mg | Iron: 0.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

29 நிமிடங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

3 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

4 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

5 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

8 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

8 மணி நேரங்கள் ago