- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
கோதுமை ரவை வச்சு உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா குஸ்கா செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? ஒரே ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இந்த கோதுமை ரவை குஸ்கா உடல் எடையை குறைக்க நினைக்கிறவங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடலாம். பிரியாணி சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா உடல் எடையை குறைக்கிற சமயத்துல சாப்பிட முடியாது அதனால இந்த மாதிரி சிம்பிளா குஸ்கா செஞ்சு சாப்பிடலாம். காய்கறிகள் இல்லனா காளான் இல்ல அசைவமா இருந்ததுனா சிக்கன் மட்டன் கூட சேர்த்து இந்த சூப்பரான கோதுமை ரவை குஸ்கா செஞ்சு பார்க்கலாம். டேஸ்ட் ரொம்பவே அற்புதமா இருக்கும்.
இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க இதுக்கு சைடிஸ் கூட தேவைப்படாது. ரவைல உப்புமா பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு பிரியாணி அப்படின்னு ஏமாத்திடலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து விடலாம். கண்டிப்பாக குழந்தைகள் காலி பண்ணிட்டு தான் வருவாங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும். வீட்ல கூட நீங்க பிரேக்ஃபாஸ்ட் இல்லனா டின்னருக்கு இந்த ரெசிபியை செஞ்சு பார்க்கலாம். எப்பவும் ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.
இதுக்கு நம்ம பிரியாணி பவுடர் சேர்க்காமல் பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்து பிரஸ்ஸா பிரியாணி மசாலா போட்டு செய்றதால டேஸ்ட் இன்னுமே அற்புதமா இருக்கும். பொதுவா பிரியாணி மசாலா கடையில் வாங்கி போடுறத விட இந்த மாதிரி அரைச்சு சேர்க்கிறது ரொம்ப ரொம்ப வாசனையாவும் டேஸ்ட்டாவும் இருக்கும். நீங்க இந்த பிரியாணி மசாலாவ மொத்தமா கூட அரைச்சு வச்சுக்கலாம். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி நிறையவே சாப்பிடுவாங்க. கோதுமை ரவை மட்டுமில்லாமல் வெள்ளை ரவைலயும் இந்த ரெசிபியை செஞ்சு பார்க்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான கோதுமை ரவை குஸ்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு இனி சம்பா கோதுமை ரவா அடை இப்படி செய்து பாருங்க! 1 அடையை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். புதினா இலைகள் மல்லி இலைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தயிர் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி பிறகு மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை கிராம்பு, ஏலக்காய் மூன்றையும் நன்றாக அரைத்து அந்த பொடியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கடாயில் கோதுமை ரவையை சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்.
தண்ணீர் கொதித்ததும் கோதுமை ரவையை சேர்த்து கிளறி மூடி போட்டு பத்து நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான கோதுமை ரவை குஸ்கா தயார்.






