- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால் அதை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று செய்யாமல் கோதுமை ரவை வைத்து சம்பா ரவை காளான் பிரியாணி செய்யுங்கள். இதுவரை கோதுமை ரவை வைத்து உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் பிரியாணி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா?
ஒரே ஒரு தடவை செய்து சாப்பிட்டு பாருங்கள் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீர்கள். இந்த சம்பா ரவை பிரியாணி உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி செய்து சாப்பிடலாம். பிரியாணி சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா உடல் எடையை குறைக்கிற சமயத்தில் சாப்பிட முடியாது அதனால் இந்த மாதிரி சிம்பிளா சம்பா ரவை வைத்து காளான் பிரியாணி செய்து சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அற்புதமா இருக்கும் இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை வீட்டில் செய்து பாருங்கள் இதற்கு சைடு டிஷ் கூட தேவைப்படாது.
ரவை வைத்து செய்யும் உப்புமா பிடிக்காதவர்கள் இந்த மாதிரி பிரியாணி செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபியை குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ்க்கு செய்து கொடுத்து விடலாம். கண்டிப்பாக குழந்தைகள் காலி பண்ணிட்டு தான் வருவார்கள் அந்த அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியான ரெசிபி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த ரெசிபி செய்து பாருங்கள் உங்களுக்கும் சற்று விருப்பமாக இருக்கும். இப்போது சுவையான சம்பா ரவை காளான் பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் காளான், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து நன்கு ஊற வைத்து கொள்ளவும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை, கிராம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். அதன்பிறகு ஊற வைத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
பின் சம்பா ரவையை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். பின் குக்கரை திறந்து நெய் சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான சம்பா ரவை காளான் பிரியாணி தயார்.






