மயில் மற்றும் மயிலிறகு சம்பந்தமான பொருட்களை நாம் பார்க்கும் போதே மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். அந்த மயிலிறையில் அப்படி என்னதான் ரகசியம் இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. மயிலிறகை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் அவ்வளவு ஒரு பேரழகு கொண்டது மயிலிறகு அதனை நாம் வீட்டில் எதற்கெல்லாம் பயன்படுத்தினால் வீடு அழகாக மாறும் என்பதை பற்றியும் வீட்டில் மயிலிறகை வைப்பதால் ஏற்படும் பண வரவை பற்றியும் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

நேர்மறை ஆற்றலை கொடுக்கும் மயிலிறகு
வீட்டில் அழகிற்காகவும் பணத்திற்காகவும் மட்டுமில்லாமல் மயிலிறகை வைப்பதை தாண்டி நேர்மறை ஆற்றலை வீடு முழுவதும் பரவச் செய்வதற்காகவும் மயிலிறகை பயன்படுத்தலாம். மயிலிறகை புத்தகத்தில் வைத்தால் குட்டி போடும் என்று சிறிய வயதில் பலர் கூற கேட்டிருப்போம் ஆனால் அது உண்மையல்ல வைலரிகை புத்தகத்தில் வைப்பதால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் உள்ள குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.
படிப்பில் ஆர்வத்தை கொடுக்கும் மயிலிறகு
இன்றும் கூட குழந்தைகளுக்கு ஒரு மயிலிறகை கொடுத்து புத்தகத்தை வைத்துக்கொள்ள சொல்லலாம் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கக்கூடிய இடத்தில் மயிலிறகை வைக்கலாம். புத்தகம் அடிக்கி வைத்திருக்கும் இடத்தில் வைக்கலாம் குழந்தைகளின் ஸ்கூல் பேக்கில் வைக்கலாம். எனவே குழந்தைகளுக்கு படிப்பில் அதிகமாக ஆர்வம் வர வேண்டும் என்றால் மயிலிறகு நேர்மறை ஆற்றலை அதிகரித்து குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வத்தை அதிகரிக்கும்.
வரவேற்பறையில் மயிலிறகு
வரவேற்பு அறையில் அழகிற்காக மயிலிறகை வைத்தால் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். மயிலிறகு போட்ட படம் அல்லது மயிலிறகை ஒரு ஜாடியில் வைத்து வரவேற்பதில் வைத்து பாருங்கள். என்னதான் கோபம் வந்தாலும் அது சட்டென்று மறைந்து போகும் எதிர்மறை ஆற்றலின் தாக்கமும் குறைந்து மயிலிறகை பார்க்க பார்க்க மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கும்.
பீடையை நீக்கும் மயிலிறகு
மேலும் இந்த மயிலிறகை வைத்து தலையை வருடி ஒரு மந்திரத்தை சொல்லி தூபம் போட்டால் நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் பீடை நீங்கும் என்று ஒரு நம்பிக்கையும் உள்ளது. அந்த காலத்தில் ராஜாக்கள் விசிறி ஆகவும் இந்த மகிமையை பயன்படுத்தி வந்தார்கள் காரணம் அதிலிருந்து வரக்கூடிய காற்று நல்ல தூக்கத்தை கொடுக்கும் மன அமைதியை கொடுக்கும்.
பண வரவிற்கு உதவும் மயிலிறகு
பணவரவை அதிகரிப்பதற்கு மயிலிறகை வீட்டில் பணம் வைக்கக்கூடிய நகை வைக்க கூடிய இடமான பீரோவில் வைக்கலாம் மேலும் பர்ஸில் வைலிறகை வைத்துக் கொள்ளலாம். அப்படி நாம் இந்த இடங்களில் வைப்பதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். மேலும் நகை அடமானம் வைத்த சீட்டு நில பத்திரம் வீட்டு பத்திரம் இதையெல்லாம் அடமானம் வைத்திருந்தால் அந்த அடமான பத்திரத்திற்கு நடுவே ஒரு மயிலிறகை வைத்தால் சீக்கிரமே அடமானம் வைத்த பொருட்களை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும். இந்த எளிமையான பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக நல்லதே நடக்கும்.
இதனையும் படியுங்கள் : பணம் அதிகரிக்க அஞ்சறைப் பெட்டி இரகசியம்


