அசைவத்துல மட்டன் சிக்கன் மீன் கணவாய் முட்டை அப்படின்னு இவ்வளவு வெரைட்டீஸ் இருந்தாலும் கூட நமக்கு சிக்கன் நான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த சிக்கன் வச்சு நிறைய ரெசிபி செஞ்சு சாப்பிட்டு இருப்போம் சிக்கன் பிரியாணி சிக்கன் தொக்கு சிக்கன் மிளகு பிரட்டல் சிக்கன் 65 சிக்கன் குருமா அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.
அந்த ரெசிபிஸ் எல்லாமே ரொம்ப சூப்பரா இருந்திருக்கும் அதே மாதிரி ரொம்ப அட்டகாசமான சுவைல இடியாப்பம் இட்லி, தோசை, சப்பாத்தி பூரி அப்படின்னா எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடக்கூடிய ஒரு சூப்பரான வெள்ளை சிக்கன் குருமா தான் செய்யப் போறோம். இதுல கசகசா முந்திரி தேங்காய் எண்ணெய் எல்லாமே அரைச்சு சேக்குறதால டேஸ்ட் நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு சூப்பரா இருக்கும்.
எப்ப உங்க வீட்ல இடியாப்பம் செஞ்சா எப்பவும் போல ஒரே மாதிரியா குருமா தேங்காய் பால் செய்யாமல் இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான வெள்ளை சிக்கன் குருமா செஞ்சு சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கே அவ்வளவு ருசியா இருக்கும்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நீங்க இந்த வெள்ளை சிக்கன் குருமாவ செஞ்சு குடுங்க சாப்பிட்டு அசந்து போய்விடுவார்கள். இப்ப வாங்க இந்த சூப்பரான வெள்ளை சிக்கன் குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெள்ளை சிக்கன் குருமா | White Chicken Kurma In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ சிக்கன்
- 1 பெரிய வெங்காயம்
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- 1 கைப்பிடி புதினா இலைகள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் கசகசா
- 6 முந்திரி பருப்பு
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 கப் தேங்காய் துருவல்
- 3 பச்சை மிளகாய்
- 1 பட்டை
- 2 கிராம்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 காய்ந்த மிளகாய்
- 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- 1 கப் தயிர்
- 1 பிரியாணி இலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மிளகு சீரகம் சோம்பு, கசகசா, முந்திரி ஒரு வெங்காயம் அனைத்தையும்சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் பிறகுஅதில் நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
- நன்றாக வதங்கியதும் அதில் சிக்கனை கழுவி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் அரைத்த விழுது மல்லித்தூள் மிளகுத்தூள்தேவையான அளவு உப்பு தயிர் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.
- பிறகு அதில் புதினா இலைகளை சேர்த்து ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை காய்ந்தமிளகாய் போட்டு தாளித்து குருமாவில் சேர்த்து கரம் மசாலாவும் சேர்த்து இரண்டு நிமிடங்கள்கழித்து இறக்கினால் சுவையான வெள்ளை சிக்கன் குருமா தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!