- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
ஒரு சிலருக்கு நிறைய மசாலாக்கள் போட்டு பிரியாணி குஸ்கா சாப்பிடுவது சுத்தமா பிடிக்காது ஒரு சிலருக்கு ஜீரா ரைஸ் மசாலா இல்லாத முட்டை சாதம் இதெல்லாம் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இன்னைக்கு நம்ம பெருசா எந்த மசாலாக்களும் சேர்க்காமல் ஒரு சூப்பரான வெள்ளை குஸ்கா ரெசிபி செய்ய போறோம். இந்த வெள்ளை குஸ்கா ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கு கொடுத்து விடுவதற்கு ஒரு சூப்பரான ரெசிபி இது. வீட்லயுமே நான்வெஜ் எடுக்க முடியாத சமயத்துல இந்த மாதிரி செஞ்சு கூட ஏதாவது தொக்கு மாதிரி வச்சு சாப்பிடலாம். இதுக்கு காரசாரமா வைக்கிற தொக்கு சூப்பரான காம்பினேஷனா இருக்கும்.
அப்படி சாப்பிட பிடிக்கலைன்னா வெறும் வெள்ளை குஸ்கா கூட கொஞ்சமா தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டாலே அவ்ளோ சூப்பரா இருக்கும் வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் இதை செஞ்சு கொடுக்கலாம் பிரியாணி மாதிரியே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ருசியான வெள்ளை குஸ்காவை கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க வீட்டுக்கு வர்ற விருந்தாளிகள் கூட இதை சாப்பிட்டு எப்படி செஞ்சீங்கன்னு ரெசிபி கேட்டுட்டு போவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். பிரியாணி செய்ய தெரியாதவங்க கூட இந்த செய்முறையில் வெள்ளை குஸ்கா செஞ்சு பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ஒரு சூப்பரான குஸ்கா உங்களுக்கு கிடைக்கும்.
இன்னொரு பேரு பகாரா ரைஸ் அப்படின்னு சொல்லுவாங்க. இந்த பகாரா ரைஸ் ஆந்திரால ரொம்ப ரொம்ப ஃபேமஸான ஒரு ரைஸ். இதை ஜீரா ரைஸ் அப்படின்னு கூட சொல்லுவாங்க. இந்த மாதிரி நிறைய பெயர்கள் இருக்கக்கூடிய இந்த ரெசிபிய கண்டிப்பா நீங்க டைம் கிடைக்கும்போது ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. பெருசா மசாலாக்கள் சேர்க்காட்டியும் வீடே மணமணக்க கூடிய இந்த வெள்ளை குஸ்கா ரெசிபி எல்லாரையும் சாப்பிடுவதற்கு கூப்பிட்டு வரும் அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க மசாலாக்கள் அதிகமா இல்லாம சட்டுனு சூப்பரா உதிரி உதிரியா இருக்கக்கூடிய இந்த வெள்ளை குஸ்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான தேங்காய் பால் குஸ்கா இப்படி செஞ்சி கொடுங்க! கொஞ்சம் கூட மிஞ்சாது!
Ingredients
Method
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் மிளகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் சேர்த்து நன்றாக வதக்கியதும் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து சிறிதளவு நெய் ஊற்றி கரம் மசாலா சேர்த்து கலந்து அப்படியே வேக வைக்கவும்.
அரிசி நன்றாக உதிரி உதிரியாக வந்து வெந்ததும் சிறிதளவு நெய் சேர்த்து இறக்கினால் சுவையான வெள்ளை குஸ்கா தயார்.






