சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால் படிப்பில் ஈடுபாடு இல்லாமலும், சிலர் மணிக்கணக்காய் படித்தாலும், பாடங்கள் புரியாமலும் சிரமப்படுவர். சிலர் விளையாட்டு புத்தியால் படிப்பில் கவனமில்லாமல் இருப்பர். இன்னும் சிலர், வீட்டில் நன்றாகப் படிப்பர். ஆனால், தேர்வு அறைக்கு போனதும் பதட்டத்தில் படித்ததை மறந்து விடுவர். அதனால் குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்க பெற்றோர்களும் பல விதமான பயிற்சிகளை அவர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். தங்கள் குழந்தைகள் அனைத்து விதத்திலும் திறமைசாலிகளாக இருக்க வேண்டும் என்பதற்காக கடும் முயற்சி எடுக்கிறார்கள். ஆனாலும் குழந்தைகள் நினைவாற்றல் குறைவு பிரச்சனை காரணமாக பெரிதும் சிரமப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் படிப்பில் சிறந்து விளங்க செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் பதிவில் பார்ப்போம்.

படிப்பில் ஆர்வம் பெருக
ஆஞ்சநேயர் வழிபாடு பொதுவாக கல்வி என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவதே சரஸ்வதியும் ஹயக்ரீவரும் தான். ஆனால் இவர்களை தவர்த்து சில தெய்வங்களை நாம் வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். அந்த வகையில் கலியுக்தில் கண்கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். அதாவது தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தன்னிடம் உள்ள எல்லா ஆற்றலையும் கொடுத்து மனதில் வலிமையை ஏற்படுத்துவார் என்பது ஆஞ்சநேய வழிபாட்டின் ஐதீகமாகும். ஆஞ்சநேயரை வழிபடும் குழந்தைகளுக்கு கல்வியில் உள்ள தடைகள் நீங்கி படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
வழிபாட்டு முறை
இந்த வழிபாடு செய்வதற்கு அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரின் ஆலயத்திற்கு சென்று இரண்டு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றிவிட்டு அந்த நெய்யில் சிறிதளவு மஞ்சள் தூளை போட வேண்டும். அதன்பிறகு ஆஞ்சநேயருக்கு துளசி மாலை வாங்கி கொடுத்து பிள்ளைகளின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று தான் செய்ய வேண்டும். அமாவாசை நாளில் விளக்கு போடுவதால் ராகு காலம், எமகண்ட நேரம் என்று எதையும் பார்க்க வேண்டாம். இவ்வாறு ஆஞ்சநேயரை தொடர்ந்து நம்பிக்கையுடன் வழிபடுவதால் ஆஞ்சநேயரின் அருள் பரிபூரணமான அருளால் கல்வியில் மேன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.
இதனையும் படியுங்கள் : குழந்தைகளுடைய ஒழுக்கத்திற்காகவும் கல்வி அறிவிற்காவும் செய்ய வேண்டிய வழிபாடு!


