ஒரு சிலர் மிகவும் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ஆனால் திடீரென ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து பிரச்சனை வரும் பலவித கஷ்டங்களுக்கு ஆளாகுவார்கள். சூழ்நிலை என்பது திடீரென வந்து பல பிரச்சினைகளை கொடுத்து செல்லும் இப்படி திடீரென ஏதாவது ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் கெட்ட சக்திகளுடைய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். எனவே அந்த கெட்ட சக்திகளை விரட்டி அடிப்பதற்கு செய்ய வேண்டிய ஆஞ்சநேயர் வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

ஆஞ்சநேயர் வழிபாடு
அஞ்சாநெஞ்சனாக திகழக்கூடிய ஆஞ்சநேயர் மிகவும் வீரமானவர். சூரிய பகவானையே அக்னி பழம் என்று நினைத்து விழுங்க முயற்சி செய்தவர். ஆஞ்சநேயர் அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை முழு மனதோடு நாம் வழிபட்டு வரும் போது பயம் என்ற சொல்லுக்கு நமக்கு அர்த்தம் தெரியாமல் போய்விடும். தைரியம் அதிகமாக உருவாகும் பிரச்சனை என்னவாக இருந்தாலும் தோஷங்கள் என்னவாக இருந்தாலும் அனைத்தும் நீங்கும். இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும்.
வழிபாட்டை செய்யும் முறை
இந்த வழிபாட்டை கோவிலுக்கு சென்றோம் செய்யலாம். அல்லது வீட்டிலேயே செய்யலாம் வீட்டில் செய்பவர்களாக இருந்தால் ஆஞ்சநேயர் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்குமம் பொட்டு வைத்து பூக்களால் அலங்கரித்து துளசி இலைகளால் மாலை கட்டி போட்டு வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை நெய்வேதியம் ஆக வைக்க வேண்டும். பிறகு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து ஆஞ்சநேயருடைய நான்கு வரி மந்திரத்தை ஒன்பது முறை உச்சரிக்க வேண்டும்.
மந்திரம்
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாராம் பிரம்ம சாரினம் துஷ்ட சக்தி நிவாஷய அனுமந்தம் உபாஸ் மயே
இந்த மந்திரத்தை கூற வேண்டிய நேரம்
இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை என்று செவ்வாய் ஹோலியான காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் ஏதாவது ஒரு நேரத்தில் உச்சரிக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் வழிபாட்டையும் செய்ய வேண்டும் பிறகு நெய்வேதியமாக வைத்த பிரசாதத்தை வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் கொடுக்க வேண்டும். கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்தாலும் செவ்வாய் ஹோரையில் தான் செய்ய வேண்டும். கோவிலில் சென்று செய்யும்போது துளசி மாளிகை கொடுத்து சன்னதிக்கு முன்பாக இரண்டு தீபங்களையும் ஏற்றி வைத்து மந்திரத்தை கூறி ஆஞ்சநேயரை வலம் வர வேண்டும். பிறகு உங்களுடைய வீட்டில் கெட்ட சக்திகள் அனைத்தும் விலகிவிடும். கோவிலில் இருந்து துளசி இலைகளை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் சாப்பிட கொடுக்க வேண்டும். தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நிச்சயமாக தீய சக்திகளின் பாதிப்பு குறையும்.
இதனையும் படியுங்கள் : நவகிரக பாதிப்பு நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு


