ஒரு சிலர் வாடகை வீட்டில் இருந்து கொண்டு மிகப்பெரிய சிக்கல்களுக்கு உள்ளாகி இருப்பார்கள். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அதில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். சொத்து பிரச்சனை நிலத்தை வாங்குவதில் விற்பதில் பிரச்சனை வாஸ்து பிரச்சனை நிலம் தோட்டம் ரியல் எஸ்டேட் வேளாண்மை பாகப்பிரிவினை வீடு போன்ற பூமி சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர விவரம் தரக்கூடிய பூமிநாத சுவாமி வழிபடுவதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதவியில் பார்க்கலாம்.

சொந்த பூமி
ஒருவருக்கு சொந்தமாக இடம் இருந்தாலும் பிரச்சனை இல்லாவிட்டாலும் பிரச்சனை என்ற சூழ்நிலை இருக்கும். எப்படிப்பட்ட பூமி சார்ந்த நிலம் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் பூமிக்கு உரிய நாயகனாக விளங்கக்கூடிய பூமிநாத சுவாமி வணங்குவதால் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடும். சுமார் 2000 வருடங்கள் பழமையான இந்த சக்தி வாய்ந்த திருக்கோவில் திருச்சியில் மணச்சநல்லூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது சுயம்புலிங்கமாக காட்சி தரக்கூடிய பூமிநாத சுவாமி உடன் அறம் பலத்து நாயகியாக ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் சன்னதியும் உள்ளது.
மணச்சநல்லூரில் அமைந்துள்ள கோவில்
மண்+அரக்க நல்லூர் என்பது மருதி மணச்சநல்லூர் என்று மாறியது. அகத்தியர் தன்னுடைய நூலில் 16 விதமான தோஷங்களை இந்த தலம் நீக்கும் என்று கூறியுள்ளார். பூமாதேவிக்கு நம்மை தாங்கக்கூடிய அளவிற்கு சக்தியை கொடுத்தது கூட இந்த பூமிநாத சுவாமி என்று வரலாறு கூறுகிறது. ராகு மற்றும் கேது பகவான் மனித உருவத்தில் இந்த கோவிலில் காணப்படுவது மிகவும் அபூர்வமான காட்சி. இங்கு அகத்தியர் சாபம் பெற்ற இந்திரன் சாப விமோசனம் அடைந்ததாக ஸ்தலபுராணம் கூறுகிறது.
சொந்த வீடு கட்ட பரிகாரம்
பூமிக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கக்கூடிய வன்னி மற்றும் வில்வம் ஆகிய விருட்சங்கள் இங்கு ஸ்தல விருட்சமாக இருக்கிறது. சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலத்தை வாங்குவதில் விற்பதில் பிரச்சனை உள்ளவர்கள் சொத்து பிரச்சனை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் சொந்த நிலத்திற்கு சென்று வடக்கு கிழக்கு மூலையில் மண் தோண்டி புதன் ஹோரையில் மூன்று கைப்பிடி அளவிற்கு மண்ணை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கோவிலுக்கு சென்று கொடிமரப் பிள்ளையாருக்கு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து விட்டு பிறகு மூலவராக விளங்கக்கூடிய பூமிநாத சுவாமிக்கும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு நாம் கொண்டு வந்த மண்ணை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
பிறகு அர்ச்சனை செய்த மண்ணை அங்கு இருக்கக்கூடிய ஸ்தல விருட்சமான வில்வ மரத்தின் அடியில் போட வேண்டும். பிறகு வன்னி மரத்திற்கு அடியில் இருக்கக்கூடிய மண்ணை மூன்று கைப்பிடி அளவிற்கு எடுத்து அதே மஞ்சள் துணியில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று முறை பிரகாரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் ஒரு வருடத்திற்குள் நாம் வேண்டிய அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். வீட்டிற்கு வந்து புதன் ஹோரை நேரம் பார்த்து நீங்கள் உங்கள் இடத்தில் மண் எடுத்த அதே இடத்தில் புதிதாக கோவிலில் இருந்து கொண்டு வந்த மண்ணை போட்டு தீப தூப ஆரத்தி காட்டி வழிபாடு செய்ய வேண்டும். அந்த மஞ்சள் நிற துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து முடிந்து உங்களுடைய பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறியதும் மறுபடியும் அந்த நாணயத்தை அதே கோவில் உண்டியலில் செலுத்தி விட வேண்டும்.
இதனையும் படியுங்கள் : செல்வம் வீடு தேடி வர வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருள்!!


