முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர்தான் விநாயகப் பெருமான். மேலும் நவகிரகங்களுக்கும் தலைவராகவும் திகழக்கூடியவர். நவகிரகங்களை தன்னகத்தை கொண்டு அருள் புரியக்கூடிய தெய்வமாகத்தான் விநாயகப் பெருமான் உள்ளார் விநாயகப் பெருமானை வழிபடுவதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் அதேபோல் காரிய தடைகள் நீங்கி வெற்றியும் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் விநாயகப் பெருமானுடைய அருள் நமக்கு முழுவதுமாக தேவை. அப்படிப்பட்ட முருகப் பெருமானை வழிபாடு செய்யும் பொழுது ஒரு சில பொருட்களை முக்கியமாக நாம் பயன்படுத்துவோம் அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்று தான் அருகம்புல். அருகம்புல்லில் பலவிதமான மருத்துவ குணங்கள் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தெய்வீக பொருளாகவும் திகழ்கிறது. அருகம்புல்லுக்கு இணையாக தேவலோகத்தில் இருக்கக்கூடிய அனைத்து செல்வங்களும் நிகராகாது என்ற ஒரு புராணக்கதை கூட உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அருகம்புல்லை எந்த முறையில் பயன்படுத்தி மாலை கட்டினாள் சகல செல்வங்களும் உண்டாகும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

விநாயகப் பெருமான் வழிபாடு
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து நாட்களும் சிறப்பான நாட்கள் தான். ஆனால் நவகிரகத்தால் யாருக்கு என்ன பிரச்சனை உள்ளதோ அது தொடர்பாக விநாயகப் பெருமானை அதற்கு ஏற்றவாறு வழிபாடு செய்வது சிறந்தது. விநாயகப் பெருமானுக்கு உகந்த சதுர்த்தி திதியில் இந்த வழிபாட்டை மேற்கொள்வதும் சிறந்தது தான். விநாயகரை அப்படி வழிபாடு செய்யும்போது அருகம்புல்லை பயன்படுத்தி மாலை தயார் செய்து விநாயகப் பெருமானுக்கு போட்டு வழிபாடு செய்ய வேண்டும் அதற்கு ஒரு சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
அருகம்புல் மாலை
அருகம்புல் மாலையை கடையில் காசு கொடுத்து வாங்கி போடக்கூடாது. இதனை நம்முடைய கைப்பட கட்டி விநாயகருக்கு சாற்றும் பொழுது தான் நம்முடைய வேண்டுதல் முழுமையாக நிறைவேறும். இதற்கு நுனி அருகம்புள்ளாக 21 எண்ணிக்கையில் அருகம்புல் தேவை அதனை ஒரு கட்டாக கட்டிக் கொள்ள வேண்டும். அதை நாம் மாலையாக தொடுத்து விநாயகருக்கு சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். அருகம்புல் மாலை தயார் செய்யும் போது நம்முடைய வேண்டுதல்களை கூறி மனதார வழிபட்டுக் கொண்டே செய்ய வேண்டும்.
அருகம்புல் மாலையின் சிறப்பு
இப்படி நாம் அருகம்புல் மாலையை விநாயகருக்கு நம் கைகளால் கட்டி சாட்சி வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நாம் நினைத்த அனைத்துமே நமக்கு கிடைக்கும். விநாயகர் மனம் மகிழ்ந்து நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவார் சகல செல்வத்தையும் நமக்கு கொடுப்பார். விநாயகப் பெருமானுக்கு உரித்தான அருகம்புல் மாலையை நம் கைகளாலேயே கட்டி சாற்றி வழிபாடு செய்து அவருடைய அருளை முழுவதுமாக பெறலாம்.
இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் முன்னேற விநாயகர் வழிபாடு


