Home ஆன்மிகம் பொருளாதார சிக்கல்கள் நீங்குவதற்கு கிருஷ்ணர் வழிபாடு!!

பொருளாதார சிக்கல்கள் நீங்குவதற்கு கிருஷ்ணர் வழிபாடு!!

நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினை என்றால் பொருளாதார பிரச்சினை தான். பொருளாதாரத்தில் சிக்கல்கள் உண்டாகும் போது அதனை சரி செய்ய நாம் பல விதங்களில் உழைத்து சம்பாதிக்க நினைப்போம். ஆனால் என்ன தான் பணத்தை சம்பாதிக்க நாம் நிறைய முயற்சிகள் எடுத்தாலும் தெய்வத்தின் அருளும் நமக்கு வேண்டும். அந்த வகையில் பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்களை நீக்கி முன்னேற்றத்தை தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் பெருமாள். அத்தகைய தெய்வத்தை எப்படி வழிபாடு செய்து பொருளாதார ரீதியாக இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

பணக்கார கடவுள் பெருமாள்

பெருமாள் என்றால் என்ன நம் நினைவுக்கு வருவது அவர் பணக்கார கடவுள் என்று தான். பெருமாள் பல அவதாரங்கள் எடுத்துள்ளார் அந்த அவதாரங்களில் ஒன்று தான் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் பல விதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் நீங்கும். பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் கிருஷ்ணரை நினைத்து மனதார வழிபாடு செய்தால் கிருஷ்ணர் உங்களுக்கு அருள் புரிவார்.

கிருஷ்ணர் வழிபாடு

கிருஷ்ணருக்கு ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை அன்றும் துளசி மாலை வாங்கி கொடுத்து அவருக்கு பிடித்த அவலை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் அந்த நெய்வீதியத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பதன் மூலம் கிருஷ்ணனுடைய அருளை முழுவதுமாக பெற முடியும். தொடர்ச்சியாக 27 சனிக்கிழமைகள் இந்த முறையில் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்து வந்தால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

கிருஷ்ணருக்கு நெய்வேதியம்

இந்த வழிபாட்டை கிருஷ்ணர் கோவிலிலும் சென்று செய்யலாம் இல்லையென்றால் பெருமாள் கோவிலிலும் செய்யலாம். பெருமாளுக்கும் துளசி மாலை வாங்கி கொடுத்து கடுகு எண்ணெயால் தீபம் ஏற்றி புளியோதரையை நெய்வேதியம் ஆக வைத்து வழிபாடு செய்துவிட்டு அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அதனை தானமாக கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் நிச்சயமாக நம் வாழ்க்கையில் உள்ள பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் தீர்ந்து போகும். கிருஷ்ணருக்கோ அல்லது பெருமாளுக்கோ முழு மனதோடு தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை 27 சனிக்கிழமைகள் செய்வதன் மூலம் மகாலட்சுமி தேவியாருடைய அருளையும் முழுவதுமாக பெற முடியும். பொருளாதார சிக்கல்களோடு சேர்த்து வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : சுக்கிர பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!!

-விளம்பரம்-